பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முகவுரை பேராசிரியர், வித்துவான் திரு G. சுப்பிரமணிய பின்ளை M. A. B.L. அவர்கள், முன்னுள் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் அண்ணுமலேப் பல்கலைக்கழகம். அறிவு திரு, ஆற்றல் என்பவற்ருற் சிறந்து நாகரிகம் பெற்று விளங்கும் நாட்டினர் பலர், தம்முடைய நாட்டு வரலாறு, மொழி வரலாறு, இலக்கிய வரலாறு முதலியவற்றை நன்கு ஆராய்ந்து தம்நாடும் மொழியும் இனமும் சிறப்புடன் திகழும்வண் ணம் உள்ளத்தை மகிழ்விக்கும் உயர்ந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு வருகின்றனர். சென்ற காலத்தில் தம் முன்னேர்கள் போற்றி வளர்த்த பேரறிவுச் செல்வங்களாகிய கலைகளின் பழுதிலாத் திறத்தையும் இனி எதிர்காலத்தில் அத்தகைய சிறப்புக்கள் பலவற்றை எய்தி மகிழவேண்டும் என்னும் பேரார்வத் தையும் வளர்க்கும் ஆராய்ச்சி நூல்கள் நம் தமிழ் மொழிக்கும் இன்றியமையாதன எனவுணர்ந்த அண்ணுமலைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழி, இலக்கியம், தமிழர் நாகரிகம் ஆகியவற்றை விளக்கும் ஆராய்ச்சி நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட்டு வருவதனை யாவரும் அறிவர். பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையின் சார்பில் வெளி யிடப் பெற்றுவரும் தமிழிலக்கிய வரலாறு பற்றிய தொகுதிகளுள் முதல் தொகுதியாக இப்பொழுது வெளியிடப் பெறுவது, செந் தமிழ்த் தொன்னூலாகிய தொல்காப்பியத்தைப் பற்றிய இலக்கிய வரலாருகும். நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் காலத் திஞலும் பொருட் சிறப்பினுலும் தொன்மையும் சிறப்பும் பெற்று விளங்குவது தமிழியல் நூலாகிய தொல்காப்பியமே என்பது தமிழறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இந் நூல், தமிழ் மொழியின் இலக்கணத்தையும் தமிழர் வாழ்வியலின்