பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு $5 நீர்மை திரிதலின் படி யென்பது தன்மை யென்னும் பொருளிலும் வழங்குவதாயிற்று. இப்படியன் இந்நிறத்தன்' என்பது திருநாவுக் கரசர் தேவாரம். பணிலம் வெண்குடை அரசெழுந்ததோர் படி யெழுந்தன என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல். "ஏசும்படியோரிளங்கொடியாய் என்புழிப் படி என்பதற்கு வடிவு என அடியார்க்கு நல்லார் பொருள் கூறியுள்ளார். யாரோர் காணுப் பலர் தொழு படிமையன் எனச் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் முறையே சாரணனது வடிவமும் விஞ்சையனின் வடிவமும் சிறப்பித்துரைக்கப்பட்டன. படிமை படிவம் எனவும் வழங்கும். "தண்டோடு பிடித்த தாழ்கமண்டலத்துப், படிவவுண்டிப் பார்ப்பன மகனே' என்பது குறுந்தொகை. இதுகாறுங் கூறியவாற்ருல் படிமை என்னுஞ் சொல் நில மென்னும் பொருளுடைய படி யென்னுஞ் சொல்லினை முதனிலை யாகக் கொண்டு தோற்றிய தனித் தமிழ்ச் சொல்லே யென்பதும், அச்சொல் தன்மை யென்னும் பொருளில் யாவரானும் பொது வாக வழங்கப்பெற்று வருவதென்பதும், அதுவே பின்னர்ச் சிறப்புடைய தவ வேடத்தியல்பினையும் குறித்து வழங்கலாயிற் றென்பதும், அது படிமா என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபன் றென்பதும், படிமை யென்னும் பழந்தமிழ்ச் சொல்லே பிராகிருத மொழியிற் படிமா எனச் சிதைந்து வழங்கியிருத்தல் வேண்டு மென்பதும் நன்கு புலனுகும். எனவே தொல்காப்பியர் சமணரென் பார் கூற்றுக்குப் படிமை யென்னும் இச்சொல் வழக்கு சான்ருகா தென்பது தேற்றம். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியனர் கற்கப்படும் நூல்களைக் கசடறக் கற்றுக் காப்பன காத்துக் கடிவன கடிந்து அறநெறி நின்று இவ் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து செம்பொருளுணர்ந்த தெய்வப் பெற்றியராதலின் "பல்புகழ் நிறுத்த படிமையோன் என அவ்வாசிரியரைப் பணம் பாரனர் பாராட்டியது மிகவும் பொருத்தமுடையதேயாகும்.