பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 91 மாறு பெயர் கொண்டு முடிந்துளது. நிலவன் மாரே புலவர் பாடன்மார் எமர்'(புறம்-375) காணன்மார் எமர் (நற்-64) என எதிர்மறையாய் நின்று பெயர்கொண்டு முடிந்தமையும் இவண் கருதற்குரியதாம். அன்றியும் மார் என்னும் இவ்விகுதி தொல் காப்பியர் காலத்தில் வினை விகுதியாகவே வழங்கப்பெற்றுளது இவ்விகுதி தோழிமார் (அகம்-15) எனப்பெயர் மேல் விகுதியாக அகநானூற்றில் ஆளப்பெற்றுளது. இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்தில் இல்லை. வியங்கோள் வினை, முன்னிலை தன்மையாகிய இரண்டிடங் களிலும் நிலைபெருதென்பது, தொல்காப்பிய விதி. இவ்விதிக்கு மாருன சொன்முடிபுகள் சில சங்கத்தொகை நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் முன்னிலை யசையாகக் குறிக்கப்பட்ட மதியென்பது திருமுருகாற்றுப்படையில் நல்குமதி' எனப் படர்க்கையில் வழங்கப்பெற்றுளது. முன்னிலைக்குரிய தெனச் சொல்லப்பட்ட மோ' என்னும் அசை, புறநானூற்றில் 'சென்மோ பெரும வெம் விழவுடை நாட்டென (புறம்-38!) எனத் தன்மைக்கண் ஆளப்பெற்றது. 'வருக மாளவென்னுயிர் (அகன்-16) யாழநின் (அகம் - 39, 86) பாடித்தை (கலி. 131) பலரே தெய்ய வெம்மறை யாதீமே! (ஐங்-64) நும்முர்ச் செல்கம் எழுமோ தெய்யோ' (ஐங்-236) நிலி இயரத்தை நீ நிலமிசை யானே' (புறம்- 66) 'அஞ்சுவதோரும் அறனே (குறள்-366) காதல் நன்மரநீ மற்றிசினே (புறம்-272) பணியுமா மென்றும் பெருமை: (குறள்-978) ஈங்காயினவால் என்றிசின் யானே' (நச்சினர்க் கினியர் உரை மேற்கோள்) குன்றுதொ ருடலும் நின்றதன் பண்பே (திருமுருகு-217) என இத்தொடர்களில் வழங்கியுள்ள மாள. யாழ, இத்தை, தெய்ய(தெய்யோ) அத்தை, ஒரும், இசின், ஆம், ஆல், தொறு என்பன தொல்காப்பியத்திற் சொல்லப்படாத அசை நிலைகளாம். இவை தொல்காப்பியனுர்க்குப் பிற்பட்ட