பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொல் காப்பியம் காலத்தில் தோன்றி வழக்கில் இடம் பெற்றனவாகும். இவற்றை மேற்கொண்டு வழங்கிய சங்கச் செய்யுட்கள் தொல்காப்பியத் திற்கு நெடுங்காலத்திற்குப் பின் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும். ஒருவன், ஒருத்தி என்னுஞ் சொற்கள் தொல்காப்பியத்தில் வழங்குகின்றன. இவை முறையே ஒத்தன் ஒத்தி, எனப் பிற் காலத்தில் திரிந்து வழங்கியுள்ளன. இ.தொத்தன் (கலி-103) 'இ.தொத்தி (கலி-143) என வழங்குதல் காண்க. சகரமெய் அ, ஐ, ஒள என்னும் முன்றுயிரோடும் கூடி மொழிக்கு முதலில் வாராது என்பது தொல்காப்பிய விதி. ‘சகடம் (புறம்-102, அகம்-136) சடை’ (புறம்-1) 'சதுக்கம் (முருகு-25) சந்து (மலைபடு-392) சமம் (புறம்-14, குறள்-99) சமன் (குறள்-118) "சலம் (மதுரைக்காஞ்சி-112, குறள்-660) ‘சவட்டி (பெரும்பாண்-217) "சவட்டும் (பதிற்-84) எனச் சகர மெய் அகரத்துடன் முதலாகும் சொற்கள் சங்கச் செய்யுட்களில் பயின்று வழங்கியுள்ளன. யகர மெய் ஆகாரவுயிரோடல்லது ஏனைப் பதிைேருயிர்க ளோடும் மொழிக்கு முதலாகாதெனத் தொல்காப்பியங் கூறும். இவ்வரையறைக்கு மாருக யவனர்' என்னும் சொல் சங்கச் செய்யுட்களிற் பெருக வழங்கியுளது. ஞகர மெய் ஆ, ஏ, ஓ என்னும் மூன்றுயிரோடு மட்டுமே மொழிக்கு முதலாம் என்பது விதி. இதற்கு மாருக ஞமலி' (புறம்-74, அகம்-140, 388, பட்டினப்-140), ஞரல' (திருமுருகா120, பதிற்-30) “ளுமன் (புறம்-6) என ஞகர மெய் அகரத்தொடு முதலாகும் சொற்களும் 'Dமிறு (புறம்-93, அகம்-59) என இகரத்தோடு முதலாகிய சொல்லும் சங்க நூல்களில் வழங்கப் பெற்றுள்ளன.