பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix சிறப்பினையும் ஒருங்குணர்த்தும் திட்பமும் தெளிவும் வாய்ந்த தென்பதும், இந் நூலிற் கூறப்பட்டுள்ள அரும்பொருள்களே உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானல், இந்நூலாசிரிய ராகிய தொல்காப்பியனர் வாழ்ந்த காலம், இந் நூல் இயற்றப் பெற்றதன் நோக்கம்,இந்நூலின் அமைப்பு ஆகியவற்றைச் சமயச் சார்பு முதலியன பற்றி நடுநிலை திறம்பாமல், கிடைக்குஞ் சான்று களே வைத்துக்கொண்டு உண்மையை யுணரும் உயர்ந்த நோக் கத்துடன் ஆராய்ந்து வரையறை செய்துகொள்ளுதல் வேண் டும் என்பதும் அறிஞர் பலர் நன்கறிந்தனவே. காய்தல் உவத் தலகற்றி ஆராயும் இம்முறையில் தொல்காப்பியமாகிய இந்நூலிற் கிடைக்கும் அகச்சான்றுகளையும், மாறுபாடின்றி ஏற்றுக் கொள் ளத்தக்க புறச்சான்றுகளையும், தக்க ஆதாரங்களாகக் கொண்டு, ஆதாரமற்ற கற்பனைச் செய்திகளை அறவே களேந்து, ஆசிரியர் தொல்காப்பியனரைப் பற்றியும், அவர் இயற்றித் தந்த அரும் பெறல் நூலாகிய தொல்காப்பியத்தைப் பற்றியும் உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்விலக் கிய வரலாறு அமைந்திருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். இவ்வாராய்ச்சி நூலைச் செவ்வனே இயற்றித் தந்த பெருமை, தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர் திரு க. வெள்ளே வாரணனரைச் சாரும். அவர்கள், பெரும்பாலும் இலக்கணம் என்ருல் பலரும் விலக்க நினைக்கும் இக்காலத்திலே, அதில் பேரார்வம் காட்டிப் பெரிதும் முயன்று ஆராயத் துணிந்தார்கள். அன்னர் ஆராய்ச்சி மாணவராய் விளங்கிய நாளிலும், பின் ஆசிரியராய் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தபோதும் தொல்காப்பியத்தையே பாடமாக விரும்பி எடுத்துக்கொண்டார் கள். நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மாணவராய்த் தொல் காப்பிய ஆராய்ச்சிக்கும் துணைபுரிந்து வந்திருக்கிருர்கள். அவர் களுடைய தகுதியறிந்தே இப்பணி அவர்களுக்கு அளிக்கப் பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் இத்துறை