பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 95 கின்றது. ஆசிரியர் தொல்காப்பியனர் காலத்தில் வடவர் நாக ரிகம் தமிழ் மக்களால் அறிந்து மதிக்கப்பட்டதேயன்றித் தமிழ்மக்களால் அது மேற்கொள்ளப்படவில்லை. எழுத்துஞ் சொல்லும் பொருளும் எனத் தொல்காப்பியர் வகுத்துக் கூறும் இலக்கணமெல்லாம் தமிழிலக்கணமே என நச்சினர்க் கினியர் கூறுதல் இவண் கருதத்தகுவதாகும். தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டுப் பிற்றைநாளில் வழக் கொழிந்தனவும் சிலவுள. சுட்டு முதலாகிய இகர விறுதியும் எனத் தொடங்கும் சூத்திரத்திற் குறிக்கப்பட்ட அதோளி முதலிய சொற்கள், சங்கச் செய்யுட்களில் வழங்கப் பெறவில்லை. இரு திணைக்கும் பொதுவாய் வழங்கிய செய்ம்மன என்னும் வாய் பாட்டு வினைச்சொல் இப்பொழுது வழக்கரிது என இளம்பூரணர் கூறியுள்ளார். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுதியாகக் கூறப்பட்ட அகப்பொருள், நாடக வழக்கும் உலகியல் வழக்கும் விரவப் புலனெறி வழக்கஞ் செய்யுங்கால் கலியும், பரிபாடலும் ஆகிய இருவகைப் பாவிலுைம் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய தெனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனல் சங்கத் தொகை நூல்களில் அகப்பொருள்பற்றிய செய்யுட்கள் பெரும் பாலும் அகவல் நடையிலமைந்தனவாகவே காணப்படுகின்றன. தொல் காப்பியனர் காலத்துக்குப்பின் அகப்பொருட் பாடல் களுக்கு அகவல் நடையும் சிறப்புரிமை யுடையதாகக் கருதப் பட்டமை இதற்ை புலம்ை. இதுகாறும் எடுத்துக் காட்டியவற்ருல், ஆசிரியர் தொல் காப்பியனர் இயற்றிய இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப் பியம் சங்கச் செய்யுட்களுக்கும் திருக்குறளுக்கும் நெடுங் காலத் துக்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மை யுடையதென்பது இனிது புலளுதல் காணலாம்.