பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'96 தொல்காப்பியம் தொல்காப்பியனர் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப் படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ் சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர்' என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானுற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலா வதாகத் தொகுக்கப்பெற்றுளது. அப்பாடலில், ' அலங்குளைப் புரவி யைவரொடு சினை இ. நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” என முடிநாகராயர் உதியஞ்சேரலாதனை முன்னின்று அழைத்துப் போற்றியுள்ளார். "அசைந்த தலையாட்ட மணிந்த குதிரை யுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையினையுடைய துரியோதனன் முதலா கிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெருஞ்சோருகிய மிக்கவுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினுேய்' என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பாரதப்போர் கி. மு. 1500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த தென்பது ஆராய்ச்சியாளர் துணியாகும். உ தி ய ஞ் ேச ர ல் என்பான் பாரதப்போரில் இருதிறத்துப்படை வீரர்களுக்கும் 1. முடிநாகனுர் என்னும் பெயரே ஏடெழுதுவோரால் முடி நாகராயர் எனப் பிற்றை நாளில் திரித்து எழுதப்பட்டிருத்தல் வேண்டும். புறத்திணை நன்கைனர், கண்ணனுகனுர், நன்குகனர் பெட்டளுகனுர் என வழங்கும் பண்டை இயலிசைப் புலவர் பெயர்கள் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியன