பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 9? பெருஞ்சோறளித்தமையால் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பிக்கப்பெற்றன். எனவே இச் சேரமன்னன் பாரதப் போர் நிகழ்ந்தகாலை உடனிருந்து உதவிபுரிந்தவன் என்பது நன்கு புலம்ை. சேரர் குடியினராகிய இளங்கோவடிகளும், "பிரைவர் ஈரைம்பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்ருது தானளித்த சேரன்" (சிலப் வாழ்த்துக்-24) எனத் தம் குல முதல்வகிைய இவ்வேந்தர் பெருமானது பெருங் கொடையை உளமுவந்து போற்றியுள்ளார். உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறளித்த சேரன், என அடிகள் குறிப்பிடுதலால் இவன் பெருஞ்சோறளித்த நிகழ்ச்சி பாரதப்போர் நிகழ்ந்த நாளிலேயே உடன் நிகழ்ந்த தென்பது தெளிவாக விளங்குதல் காணலாம். இங்ங்ணம் உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ் சோற்று நிகழ்ச்சி பாரத காலத்தில் நிகழ்ந்ததன்றெனவும், பிற்காலத்தில் பாரதக் கதையை நாடகமாக நடித்துக் காட்டிய விழாவின் முடிவில் நாடகப் பொருநர் முதலியோர்க்கு உதியஞ்சேரலாதன் அளித்த பெருஞ் சோற்று விழாவாகவோ அன்றிப் பாண்டவர் பொருட்டும் நூற்றுவர் பொருட்டும் அவ்வேந்தன் செய்த சிரார்த்தமாகவோ அதனைக்கொள்ளல் வேண்டுமெனவும் P. பி. சீனிவாச ஐயங்கார் முதலியோர் கூறுவர்." உதியஞ்சேரலாதன் என்பான் பாரதப்போர் நிகழ்ந்த காலத்திலேயே பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கும் இன்னுர் இனியா சென்னது நடுநின்று பெருஞ்சோறு வழங்கிய வரையாவண்மை யினை இவன்காலப் புலவரான முரஞ்சியூர் முடிநாகனர் முன் னின்று பராட்டுதலானும், இவ்வேந்தனது குடியிற்ருேன்றிய 1. History of the Tamils, P. 492