பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 99 தார்க்கும்.உதியஞ்சேரல் பெருஞ்சோறளித்தானென்பது இளங்கோ வடிகள் கருத்தாதலானும், முடிநாகனர் பாடலில் ஈரைம்பதின் மரும் பொருதுகளத் தொழிய' எனவருந் தொடர்க்கு நூற்றுவர் பொருது இறக்குமளவும் என்றே புறநானுற்றுரையாசிரியர் உரை கூறியிருத்தலானும் உதியஞ்சேரலென்பான் பாண்டவர்க்கும் நூற்றுவர்க்கு மிடையே நடந்த போர்நிகழ்ச்சியில் நடுவாக நின்று பெருஞ்சோறளித்தான் எனக் கொள்ளுதலே முன்னேர் கருத்துக்கு ஏற்புடையதாகும். போர்க் காலத்தில் இருதிறத்தார்க் கும் நடுநிலையில் நின்று படையிற் புண்பட்டோர்க்கு மருந்து முதலியனவளித்து நலஞ்செய்யும் பெருந்தொண்டினை ஒரு குழுவினர் மேற்கொண்டுழைத்தலே இக்காலத்துங் காண்கின் ருேம். இவ்வாறே நம் தமிழ் வேந்தனுகிய உதியஞ்சேரலாதனும் பாரதப்போரில் பகைநட்பென்று பாராது இருதிறத்துப் படை வீரர்களுக்கும் பசிப்பிணி மருத்துவகிை நடுநின்று உதவிபுரிந் தான் எனக் கொள்வதிற் சிறிதும் தடை நிகழக் காரணமில்லை. முரஞ்சியூர் முடிநாகனராற் பாடப்பெற்ற இவ்வேந்தனும் 233-ஆம் அகப்பாடலில் மாமூலனராற் குறிக்கப்படும் மற்ருெரு சேர வேந்தனும் உதியஞ்சேரல் என்னும் ஒரு பெயரினையுடையராதலும் பெருஞ்சோறு வழங்கிய சிறப்பினை ஒருங்குடையராதலும் கருதி வெவ்வேறு காலத்தவராகிய, இவ்விரு வேந்தர்களையும் ஒருவர் என்று துணிதல் கூடாது. முன்னேர் பெயரைப் பின்னேர் புனைந்துகொள்ளும் வழக்கமுடைமைபற்றி ஒரு குடியில் ஒரு பெயருடையார் பலராதரியல்பு. உதியஞ்சேரல் என்னும் பெயர் வருமிடமெல்லாம் அப்பெயர் ஒருவனையே குறிக்குமெனக் கொள்ளுதற்கில்லை. இடமும் காலமும் பிற செயல் முறைகளும் ஆகியவற்றைக் கூர்ந்துநோக்கி இப்பெயர் இன்னுரைக் குறிக்கு மெனத் துணிதலே பொருத்தமுடையதாகும். 233-ஆம் அகப் பாடலில் மாமுலஞராற் குறிக்கப்பெற்ற உதியஞ்சேரல் என்பான் பகைவரை வென்று வீரசுவர்க்கமடைந்த தன் முன்னுேரை 1. Red Cross Societ