பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு §§§ முதலியோர்க்குப் பிண்டங் கொடுத்தற்குரிய உறவின் முறையினர் பாண்டவர்களேயாவர். அங்ங்னமாகவும் வடவேந்தர்களோடு குடிவகையால் தொடர்பில்லாத உதியஞ்சேரல் பிண்டங் கொடுத் தானென்றல் முறையாகாது. ஆகவே இரண்டாம் புறப்பாடலில் வாழ்த்தப்பெற்ற உதியஞ்சேரலும், அகம்-233-ஆம் பாடலிற் குறிக்கப்பட்ட உதியஞ்சேரலும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த வர்களாகவே கொள்ளல் வேண்டும். இவ்விருவருள்ளும் முன்ன வன் பாரத காலத்தவன்; பாரதப்போரில் இருதிறத்துப் பட்ை வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கி ஊக்குவித்தமை காரண மாகப் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனச் சிறப்பித்துப் போற்றப்பெற்றவன். இனி, மாமூலனராற் குறிக்கப்பட்ட உதியஞ் சேரலென்பான் பாரதப் போரில் தொடர்பு கொள்ளாதவன்; தன் குடியில் இறந்த முன்னேர்களைக் குறித்துப் பெருஞ்சோற்று விழா நிகழ்த்தி வழிபட்டவன். இவன் பாரத காலத்தவன் அல்லன். இவ்வேந்தன் மாமூலஞர் காலத்தை யொட்டிச் சிறிது முற்பட்டிருந்தவளுதல் வேண்டும். மாமூலனர் தம் காலத்தை யடுத்து நிகழ்ந்த வரலாறுகளைக் குறித்துச் செல்லும் வழக்கமுடையவரென்பது அவர் பாடிய பாடல்களால் நன்கு விளங்கும். " நாடுகண் ணகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ வினி வாழி தோழி " (அகம்-65} என மாமூலஞர் இவ்வுதியஞ் சேரலின் வண்மையை உவமை முகத்தாற் சிறப்பித்துப் போற்றுதலால் இவனது வண்மையா லுளதாம் பயனை இப்புலவர் நேரில் நன்கறிந்தவராதல் வேண் டும். இதல்ை இவ்வேந்தன் மாமூலஞர் காலத்தில் வாழ்ந்தவ னெனத் தெளியலாம். உதியஞ்சேரல் என்னும் இவ்வேந்தன்' 1. இந்நாளிற் கிடைக்காத பதிற்றுப்பத்தின் முதற்பத்து