பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொல்கர்ப்பியம் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாற் பாடப்பெற்ற இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் தந்தையும் செங்குட்டுவனுக்குப் பாட்ட னுமாவான். செங்குட்டுவன் காலம் கி.பி. 2ஆம் நூற்ருண், டென்பது ஆராய்ச்சியாளர் துணியாகும். ஆகவே செங்குட்டுவ னுக்குப் பாட்டளுகிய இவ்வுதியஞ்சேரல் என்பான் கி. பி. முதல் நூற்ருண்டில் ஆட்சி புரிந்தவளுதல் வேண்டுமென்பது நன்கு தெளியப்படும். எனவே கி.பி. முதல் நூற்றண்டில் வாழ்ந்தவ கிைய இவ்வுதியஞ்சேரலையும் பாரதகாலத்தவனகிய பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதனையும் ஒருவரெனக் கொள்ளுதல் எவ் வாற்ருனும் பொருந்தாமை வெளிப்படை. பாரத காலத்தில் வாழ்ந்த சேரவேந்தகிைய பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனை நோக்கி முரஞ்சியூர் முடிநாகனர் பாடிய புறப்பாடலில், நடுக்கின்றி நிலி இயரோ என அவனை முன்னிலை யாக்கி வாழ்த்துகின்ருர். இத்தொடரில் முன்னிலையிடத்தில் வியங்கோள்வினை ஆளப்பெற்றுளது. அவற்றுள் முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடும் மன்கு தாகும் வியங்கோட் கிளவி " (வினையியல்-29, என்பது தொல்காப்பிய விதி. 'வியங்கோள்வினை முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தோடும் நிலைபெருது என்பது மேற் கூறிய தொல்காப்பியச் சூத்திரத்தின் பொருளாகும். முரஞ்சியூர் முடிநாகனர் பாடலில் இவ்விதிக்கு மாருக வியங்கோள் வினை முன்னிலையிடத்தில் நிலைபெற்று வழங்கியுளது. தொல்காப்பியஞர் காலத்தும் அவர்க்கு முன்னும் உள்ள சான்ருேர் பாடல்களில் இச் சொல் வழக்கு நிலைபெற்று வழங்கியிருக்குமானுல் தொல் காப்பியனர் இதனை வழுவென்று விலக்கியிருக்கமாட்டார். இவ்வுதியஞ்சேரலாதன்மீது பாடப்பட்டதாதல் வேண்டுமென்பது, திரு. தி. வை. சதாசிவ பண்டாரத்தாரவர்கள் கருத்தாகும்.