பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமீழிலக்கிய வரலாறு 103 ஆசிரியர் இதனை வழுவென விலக்கியிருத்தலால் அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் முன்னிலை, தன்மை என்னும் ஈரிடங்களிலும் வியங்கோள்வினை நிலைபெற்று வழங்கவில்லையென்பது நன்கு பெறப்படும். தொல்காப்பியனர் காலத்தில் வழுவென்று விலக்கப் பட்ட சொல் வழக்கு அவர்க்குப் பின் வந்த முரஞ்சியூர் முடி நாகனர் காலத்தில் வழுவமைதியாக அமைத்துக்கொள்ளப்பட்ட தெனத் தெரிகிறது. எனவே முடிநாகனர் வாழ்ந்த பாரத காலத்துக்குத் தொல்காப்பியர் மிகவும் முற்பட்டவரென்பது நன்கு புலளுதல் காண்க. பெரிபிளஸ் நூலாசிரியர் குறிப்பில் இக்காலத்திலுள்ள மதுரையுங் கொற்கையுமே பாண்டியர் தலைநகரங்களாகக் குறிக்கப் பட்டுள்ளன. சிலப்பதிகாரத்திலும் சங்கச் செய்யுட்களிலும் இவ்விரு நகரங்களே பாண்டியர்க்குரிய தலைநகரங்களாகப் பேசப்படு கின்றன. வியாசரியற்றிய மாபாரத நூலில் பாண்டியரது தலைநகர் மணலூர் எனக் குறிக்கப்பெற்றுளது. வடமொழி ஆதிகாவியம் எனப் போற்றப்பெறும் வான்மீக ராமாயணம் பாண்டியர்க்குரிய தலைநகரம் கபாடம் எனவும் அது தாமிரபரணிக்குத் தெற்கே புள்ள தெனவும் கூறுகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனர் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச்சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந் தவரென்பது முன்னர்ச் சிறப்புப் பாயிர ஆராய்ச்சியில் விளக்கப் பெற்றதாதலின், அவர் காலத்தில் பாண்டியர் தலைநகராகத் தோற்றுவிக்கப்பெற்ற கபாடபுரம், பிற்றைநாளிற் குமரியாற்றைக் கடல்கொண்ட பொழுது ஒருங்கழிந்ததென்பது நன்கு புலரும். வியாசமுனிவர் பாண்டியர்க்குரிய தலைநகர் மணலூர் எனக் குறிப்பிடுதலால் அவர் காலத்துக்கு முன்னரே பாண்டியர் கபாடி புரத்தின் சிதைவறிந்து மணலூர் என்னும் மற்ருெரு பேருரினைத் தமக்குரிய தலைநகராகப் படைத்துக்கொண்டனர் எனத் தெரி கிறது. கபாடபுரமும் குமரியாறும் கடல்கோளால் அழிந்துபடு வதன் முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர் என்பது தொன்று