பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 1.65 தென்மதுரையில் நிறுவப்பெற்ற முதற் சங்கம் 4440-ஆண்டு களும் கபாடபுரத்தில் நிறுவப்பெற்ற இடைச்சங்கம் 3700-ஆண்டு களும் இப்பொழுதுள்ள மதுரையாகிய கூடல் நகரத்தில் நிறுவப் பெற்ற கடைச்சங்கம் 1850-ஆண்டுகளும் நிலைபெற்றிருந்தன வெனக் களவியலுரை கூறுகின்றது. களவியலுரைகூறும் இக் கொள்கையினைப் பின்வந்த உரையாசிரியரெல்லாரும் உடன்பட்டு ஏற்றுக்கொண்டுள்ளார்கள். கடைச்சங்கம் கி. பி. 230-க்குள் முடிந்துவிட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணியாகும். இக்குறிப் பின்படி நோக்கினல் தலைச் சங்கம் இற்றைக்கு 1,716-ஆண்டு களுக்கு முன்னே தொடங்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது புலப்படும். தொல்காப்பியனுர் தலைச்சங்கத்திறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவரென்பது முன்னர்க் குறிக்கப் பட்டது. களவியலுரையிற் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக் கிளுல் இடைச்சங்கம் கி. மு. 5320-இல் தொடங்கியதெனக் கொள்ளலாம். எனவே ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்தின் மேலெல்லை கி. மு. 5320-என்பது தெளிவர்தல் காணலாம். அறிஞர் M. சீனிவாசையங்காரவர்கள் தாம் எழுதிய 'Tamil Studies என்னும் நூலில் நிலந்தரு திருவிற் பர்ண்டியன் கி. மு. 350-ல் இருந்தவனென்றும் அக்காலமே தொல்காப் பியனுள் வாழ்ந்த காலமென்றும் குறிப்பிடுவர். அறிஞர் T. R. சேஷையங்காரவர்கள் பாணினி முனிவர் காலம் கி. மு. மூன்ரும் நூற்ருண்டென்றும் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவரே தொல்காப்பியனரென்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பிற்காலத்தே செய்து சேர்க்கப்பட்டதென்றும் கூறுவர், மேற்குறித்த அறிஞர்கள் தம் கொள்கையினை நிறுவுவதற்குத்தக்க சான்றுகளைக் காட்டவில்லை. எனவே அவர் தம் கொள்கைகளே ஊகமாகவே கருதுவதன்றி உண்மையெனக் கொள்ளுதற்கு இடமில்லை.