பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

05 தொல்காப்பியம் பாணினியம் என்னும் வடமொழி இலக்கணம் கி.மு. ஆரும் நூற்ருண்டளவிற் பழமை கூறப்படுகின்றது. பாணினி முனிவர் காலம் கி.மு. 900-என சி. வி. வைத்தியா என்பவர் வேத கால சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலிற் கூறியுள்ளார். பாணினியார், வினைகளே எல்லாச் சொற்கும் முதுனிலை (தாது) என விளக்கி ஒரு முதனிலேயிற் பிறந்த பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகின்ருர், இம்முறை தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. தொல்காப்பியஞரது வடமொழி யிலக்கணப் பயிற்சியைப் பாராட்டப் போந்த ஒரு சாலை மாளுக்கராகிய பனம்பாரளுர், தொல்காப்பியர் பாணினிக்குக் காலத்தாற் பிற்பட்டவராயின் வடமொழி வியாகரணங்களில் தலைசிறந்து விளங்கும் பாணினியத்தைக் கற்று வல்லவர் தொல்காப்பிய ரென்றே அவரைப் பாராட்டியிருப்பர் அங்ங்னங் கூருது ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்ற தொடரால் ஆசிரியரது ஐந்திர நூற் பயிற்சி யொன்றினையே சிறப்பித்துப் போற்றுதலால், வடமொழியிற் பாணினி முனிவர் வியாகரத்தினை இயற்றுதற்கு முன்பு தொல்காப்பியமாகிய இயற்றமிழ் நூல் இயற்றப்பெற்றதென்பது பெறப்படும்; என்ன? மதித்தற்குரிய பெருநூலாகிய பாணினி வியாகரணம் வட மொழியிற்ருேன்றிய பின் அந்நூற் பயிற்சியை புலமைக்குரிய சாதனமாகப் பாராட்டாது அதற்குமுன் வழக்கிழந்துபோன ஐந்திர வியாகரணப் பயிற்சியைப் பாராட்டுதல் மரபன்மையின் என்க. எனவே பாணினி முனிவர்க்குத் தொல்காப்பியர் முற்பட்ட காலத்தவரென்பது நன்கு துணியப்படும். 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' என்பது கொண்டு தொல்காப்பியரைப் பாணினிக்கு முற்பட்டவரெனக் கூறுதல் பொருந்தாதென்றும், இத்தொடரில் ஐந்திரமெனக் குறிக்கப் பட்ட வியாகரணம் வைதிக சமயத்தாரால் பூர்வ காலந்தொட்டு மேற்கொள்ளப்படாததென்றும்,அது புறச்சமயத்தாரால் பாராட்டப்