பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#13 தொல்காப்பியம் தின் ஒலித் தோற்றத்திற்கு இன்றியமையாத உந்தி முதலா முந்துவளியினையும், அது தலையிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலை பெறுமியல்பினையும், அக்காற்று தலை, மிடறு, நெஞ்சு, பல், உதடு, நா, முக்கு, அண்ணம் ஆகிய எண்வகை யுறுப்புக் களோடும் ஒன்றி எழுத்தாய் வெளிப்படும் இயல்பினையும் விரிவாக விளக்குவது, 'உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை இப் பல்லும் இதழும் நாவும் முக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னுக்கம் வேறு வேறியல திறப்படத் தெரியுங் காட்சியான” என வருந் தொல்காப்பியச் சூத்திரமாகும். இத்தொல்காப்பியச் சூத்திரத்தில் விரித்து விளக்கப்பெற்ற எழுத்தின் பிறப்புமுறை பாணினி முனிவர் சிகூைடியிற் சொல்லப்படவில்லை. அன்றியும் பாணினி முனிவர் தமது வியாகரணத்தில் எழுத்திலக்கணத்தைத் தனியே பிரித்துக் கூறவில்லை. பின்வந்த உரையாசிரியர்களே எழுத்தின் பிறப்பு முதலியவற்றை விளக்கும் பகுதிகளைத் தந்து விரித்துக் கூறியுள்ளார்கள். தொல்காப்பியர் விரித்துரைக்கும் பொருளிலக்கணப் பகுதி தமிழுக்கேயுரியதாகலின் அதனைப் பாணினியம் போன்ற பிறமொழி இலக்கண நூல்களிற் காண முடியாது. எனவே பாணினிக்குக் காலத்தாற் பிற்பட்டவர் தொல் காப்பியர் என்னுந் தமது கொள்கைக்கு அறிஞர் பிள்ளையவர்கள் கூறும் சான்றுகள் வலியற்ருெழிதல் காண்க. பதஞ்சலி முனிவர் தமது மாயாடியத்தைக் கி.மு. 150-இல் இயற்றினர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.