பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 தொல்காப்பியம் வியாகரண ஆசிரியர்கள் இப்பொருளில் வழங்கிற்றிலர். தொல் காப்பியனர் வழங்கிய இலக்கணம் என்னும் சொல்லுக்குரிய பொருளை லக்ஷணம் என்னும் சொல்லுக்கும் ஏற்றி வழங்கியவர் தென்னுட்டில் வாழ்ந்த பதஞ்சலி முனிவரேயாவர். எனவே பதஞ்சலியார்க்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் என்னுங் கூற்று ஏற்றுக்கொள்ளத் தக்கதன்ரும். "பனையின் முன்னர் கொடிமுன் வரினே என்ற முதற் குறிப்புடைய சூத்திரங்களால் பனைக்கொடி’ என்ற தொடர்க்குப் புணர்ச்சி விதி கூறிய தொல்காப்பியளுர், பனைக்கொடியினை உரிமையாகப்பெற்ற பலதேவரும் வீடுமரும் வாழ்ந்த பாரத காலத்துக்குப் பிற்பட்டவரென்றும், எனவே அவரை ஆதியூழியின் அந்தத்தில் வாழ்ந்தவராக நச்சினர்க்கினியர் கூறுவது பொருந்தாதென்றும். பாண்டி நாட்டைக் கடல்கொண்ட காலம் கி.பி. 145-என்பது இலங்கைப் பெளத்த சரிதத்தால் அறியப் படுதலின் தொல்காப்பியனர் கி.மு. 45-க்குச் சிறிது முற்பட்ட வரே யாவரென்றும் மகா வித்துவான் ரா. இராகவையங்காரவர் கள் கூறியுள்ளார். அவர்கள் கருதுமாறு பனைக்கொடி பாரத காலத்தவராகிய வீடுமன் பலராமன் என்பவர்களுக்குமட்டுமே யுரியதெனக் கொள்ளுதற்கில்லை. தாலத்துவசம் (பனைக்கொடி) ஆதிசேடல்ை கிழக்குத் திசையில் நாட்டப்பட்டுள்ளது (சர்க்கம் 40, 35) என வான்மீகிராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்துக் கூறப்பட்டதென்பதனை மகா வித்துவான் அவர்களே தெளிவாக ஒப்புக் கொள்கின்ருர்கள். எனவே பனைக்கொடியானது இராமா யண காலத்திலேயே அடையாளமாகக் கொள்ளப்பட்ட செய்தி வலியுறுதல் காணலாம். ஆகவே பனைக்கொடி நன்கு என்றதன் புணர்ச்சி விதியையெடுத்துக் காட்டித் தொல்காப்பியம் பாரத காலத்துக்குப்பின்ருேன்றியதெனத் துணிதல் பொருந்தாது. அன்றியும் தொல்காப்பியனர் கூறிய பணக்கொடி என்பதன் 1. தமிழ் வரலாறு. பக்கம், 259.