பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 16 தொல்காப்பியம் முனிவரென்றும், மெய்ப்பாடுகள் முப்பத்து மூன்றென அவரே தொகை கூறியுள்ளாரென்றும், அவர் கூறிய ஸ்மிருதியையும் விபோதத்தையும் நினைதல் என ஒன்ருக அடக்கித் தொல்காப்பிய ஞர் முப்பத்திரண்டாகக் கொண்டாரென்றும், இங்ங்ணம் நாட்டிய நூல் முறையினைத் தொல்காப்பியர் தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டமை நாட்டியமரபின் நெஞ்சுகொளி னல்லது, காட்ட லாகாப் பொருளவென்ப' என வரும் பொருளியிற் சூத்திரத் தாலும் அதற்கு நச்சினர்க்கினியரெழுதிய உரையாலும் நன்கு புலளுமென்றும் பரத நாட்டிய நூல் கூறிய பத்துவித அவத்தை களுள் சக்ஷாப்ரீதி' என்னுங் காண்டல் வேட்கையை நாட்ட மிரண்டும் என்ற சூத்திரத்தாலும் அதன்மேல் நிகழும் அவத்தை கள் ஒன்பதனையும் வேட்கையொருதலே' என்ற சூத்திரத்தாலும் தொல்காப்பியர் கூறினரென்றும் மகாவித்துவான் அவர்க கூறியுள்ளார்கள். நகை முதலிய எட்டு மெய்ப்பாடுகளுக்குமுரிய வடமொழிப் பெயர்களே இளம்பூரணரும் பேராசிரியரும் தம் முரையிற் குறிப்பிட்டிருத்தலால் வடமொழிப் பெயர்களே பெரு வழக்கென்பதும் இக்கருத்துக்கள் வடமொழியிலுள்ளனவே யென் பதும் ஊகிக்கத்தகுமென்றும், இப்பொருளேக் குறித்து முதன் முதல் நூலியற்றியவர் பரதமுனிவரென்றும், இவரது மதத்தினையே தொல்காப்பியர் மேற்கொண்டனரென்றும், வேட்கையொருதலை என்ற சூத்திரத்தில் தொல்காப்பியர் கூறும் அவத்தைகள் கி.பி. நான்காம் நூற்ருண்டிலெழுதப்பட்ட வாத்ஸ்யாயனரது காம சூத்திரத்தில் ஐந்தாம் அதிகரணத்தில் காணப்படுவதால் இவற்றைத் தொல்காப்பியர் தாமே முதன் முதல் படைத்து வழங்கினரெனக்கோடல் பொருந்தாதென்றும் அறிஞர் வையா புரிப் பிள்ளையவர்கள் மேற்கூறிய ரா. இராகவையங்காரவர்கள் கொள்கையினைப் பின்பற்றித் தமது புதுக் கொள்கையொன்றினை யும் வெளியிட்டுள்ளார்கள்.” 1. தமிழ் வரலாறு. பக்கம் 260-256. 2. தமிழ்ச் சுடர்மணிகள், பக்கம் 37-38.