பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 117 தொல்காப்பியர்ைக்கு முன்னமே நாடக வழக்கு தமிழ் நாட்டில் உருப்பெற்று வளர்ந்துவந்ததென்பது நாடக வழக் கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என வருந் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு புலனும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளையும் மொழி வளர்ச்சியின் வகைகளாகக்கொண்டு வளர்த்தபெருமை பண்டைத் தமிழ் மக்களுக்கு உரியதாகும். கூத்த நூல்பற்றியும் செய்யுளியல் பற்றியும் எண்வகை மெய்ப்பாடுகளும் விளக்குதற்குரியனவாம். ஆகவே எண்வகை மெய்ப்பாடுகளைப்பற்றி இயற்றமிழ் நூல்களும் நாடகத்தமிழ் நூல்களும் ஒப்ப விரித்துரைப்பனவாயின. இத் துறையில் பரதம் என்ற பெயருடன் இயற்றப்பட்ட நாடகத்தமிழ் நூலொன்று பண்டை நாளில் தமிழகத்து வழங்கியுளது. இடைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் முன்னேர் தேடிய அறிவுச் செல்வங்களைப்பேணுது சோம்பியிருந்தமையால் பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் பலவும் வழக்கிறந்து மறைந்தன. 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாக வுள்ள தொன்னூல்களிறந்தன” என அடியார்க்குநல்லார் கூறு தலால் இச்செய்தியுணரப்படும். சங்க காலத்திலேயே பரதம் என்னும் பெயரினதாகிய நாடகத்தமிழ் நூலும் சுவைகளையும் மெய்ப்பாட்டினையும் தனித்தனியே விரித்துரைக்கும் ஏனைய தொன் னூல்களும் வழங்கிய வரலாற்றினை அடியார்க்கு நல்லார் குறிப் பிடுதலால் எண்வகை மெய்ப்பாடுகளை வடமொழி நாட்டிய சாத்திரத்திலிருந்து தொல்காப்பியர் உணர்ந்து சொல்லின ரென்பார் கூற்று ஒரு சிறிதும் பொருந்தாமை புலம்ை. அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனர் எண்வகை மெய்ப்பாடுகளைக் குறித்து வழங்கும் பெயர்கள் யாவும் தனித் தமிழ்ச்சொற்களாகவே அமைந் துள்ளன. ஆசிரியர் எண்வகை மெய்ப்பாடுகளையும் செய்யுளின் உறுப்பாகவேகொண்டு விளக்குவதல்லது நாடகத்தின் உறுப்பாக வைத்து உரைத்திலர்.