பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 119 பூரணர் கருத்தாகும். மறையென்று வருமிடமெல்லாம் வேதமெனப் பொருள்கூறுதல் பிற்கால வழக்கமாகும். வேதம் என்னுஞ்சொல் அறிவுறுத்துவது என்னும் பொருளிலும் மறையென்னுஞ்சொல் மறைந்த நுண்பொருள்களைத் தன்னகத்தேகொண்டுள்ளது என்னும் பொருளிலும் வழங்குதலால் அவ்விரு சொற்களுள் ஒன்று மற் ருென்றின் மொழிபெயர்ப்பாதல் இயலாது. ஆகவே நரம்பின் மறையென்பது யாழ்நூலாகிய இசைத் தமிழ் நூல் எனக் கொள் ளுதலே பொருத்தமுடையதாகும். எனவே ஆசிரியர் தொல் காப்பியனர் காந்தர்வ வேதத்தை நோக்கி நூல்செய்தார் என் னுங்கூற்று ஏற்புடையதன் றென்க. தொல்காப்பியனர் கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளுக்கும் பரத முனிவர் கூறிய முப்பத்துமூன்று மெய்ப்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பின்மை முன்னர் எடுத்துக் காட்டப்பெற்றமையால் பரதமுனிவரும் தொல்காப்பியரும் ஒரு முதனூலேயே பின்பற்றியிருத்தல் வேண்டும் என்னும் ஊகத்திற்கே இடமில்லாதொழிதல்காண்க. இனி, தொல்காப்பியஞர் பொருளியலிறுதியில் ஒப்பும் உரு வும் எனத் தொடங்கும் சூத்திரத்தில், பாகுபடுத்திக் காட்டலா காதன சில பொருள்களை தொகுத்துணர்த்துகின்ருர். “ஒப்பு,உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயில், நாண் , மடன், நோய், வேட்கை, நுகர்வு என அவ்வழி வருஞ் சொல்லெல்லாம் நாட் டின் வழங்குகின்ற மரபினுனே பொருளை மனத்தினுன் உணரி னல்லது மாளுக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி ஆசிரி யன் காட்டலாகாத பொருளையுடைய" என இளம்பூரண அடிகள் இச்சூத்திரப் பொருளே இனிது விளக்கியுள்ளார்கள். இச்சூத்திரத் தில் நாட்டியன் மரபின் நெஞ்சுகொளினல்லது, காட்டலாகாப் பொருளவென்ப' என இளம்பூரணர் கொண்ட பாடமே பழைய பாடமாகும். இதற்கு மாருக நாட்டிய மரபின் நெஞ்சுகொளி னல்லது காட்டலாகாப் பொருள என்ப' என நச்சினர்க்கினியர் 1. தமிழ் வரலாறு, பக்கம், 262.