பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொல்காப்பியம் இரண்டையும் ஒன்றென எண்ணி அதனை வேட்கை முதலாகப் பின்னர்ச் சொல்லப்படும் ஒன்பதளுேடும் கூட்டிப் பத்தெனத் தொகை செய்து அவற்றைப் பத்தவத்தைகளெனக் கொள்ளு தற்குத் தொல்காப்பியச் சூத்திர அமைப்பிற் சிறிதும் இடமில்லை. இங்ங்னமாகவும் உரையாசிரியர் இச்சூத்திரத்திற் பத்தவத்தையுங் கூறப்பட்டன எனக் கூறுதல் தொல்காப்பியனர் கருத்துக்கு முற்றிலும் முரணுகும். இம்முரண்பாட்டினை யுணர்ந்த நச்சினர்க் கினியர், இச்சூத்திரத்திற்கு இளம்பூரணர் உரையைத் தழுவாது வேறு பொருள் கூறினமை இவண் கருதத் தகுவதாகும். காட்சி முதலிய மூன்றனையும் ஆசிரியர் தொல்காப்பியனர் வேறுவேறு சூத்திரங்களில் தனித்தனியே விரித்துரைக்கின்ருர் . அவை மூன்றினையும் வேட்கை முதலிய ஒன்பதோடுங் கூட்டி அவை பத்தெனத் தொகை செய்தற்கேற்ப ஆசிரியர் இயைத்துக் கூருமையானும், பண்டைப் பிறப்பின் தொடர்பால் அன்புற்ருர் இருவர் ஒன்றியுயர்ந்த பாலது ஆணையிற்ைகூடும் இயற்கைப் புணர்ச்சியில், காட்சி முதலிய மூன்றும் குறிப்பறிதற்கு முன்னர் நிகழ, வேட்கை முதலிய ஒன்பதும் குறிப்பறிதலின் பயனுய்ச் சிறப்புடை மரபிற் களவில் பின்னர் நிகழும் நிமித்தங்களாதலா னும், வடமொழி நூல்களிற் சொல்லப்படும் பத்தவத்தையினை இவற்றேடு தொடர்புபடுத்தல் இயைவதன்றென்க. வேட்கை யொருதலே' எனத் தொடங்கும் இச்சூத்திரத் திற்கும் இதனேடு தொடர்புடையதாய்ப் பின்னர் வந்துள்ள பாங்கர் நிமித்தம் பன்னிரண்டென்ப' என்ற சூத்திரத்திற்கும் முன்னே யுரையாசிரியரிருவரும் ஆசிரியர் கருத்துக்கு முரணுகப் பொருள் கூறியுள்ளார்கள். குறிப்பறிதற்கு முன்னர் நிகழும் காட்சி, ஐயம், துணிவு என்பன முன்றும், குறிப்பறிதலின் பயனுய்ப் பின்னர்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடிருகச் சொல்லப் பட்ட ஒன்பதும் ஆக இப்பன்னிரண்டும், அன்புற்ருரிருவர் துணை யாய்க் கூடுதற்கு நிமித்தமாவன என்னுங் கருத்துடன் பாங்கர்