பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 தொல்காப்பியம் லுள்ளவற்றிற்கும் வலிந்து ஒப்புமைகாட்ட முயன்ருராயினும் அவ் அத்திகளுள் இறந்தது காத்தல், எதிரதுபோற்றல், மொழிவா மென்றல், அறியாதுடம்படல் எனத் தொல்காப்பியத்திலுள்ள வற்றுக்கு ஒத்த வடமொழிப் பெயர்களைத் தேடிக் காணமுடிய வில்லை. முந்து மொழிந்ததன் தலை தடுமாற்றம் என்றதனை அபவர்க்கம் என்றும், கூறிற்றென்றலைப் பிரதேசம் என்றும், பல்பொருட்கேற்பின் நல்லது கோடலே விகற்பமென்றும், பிறன் கோட் கூறலப் பூருவபக்கமென்றும், எதிர்பொருளுணர்த்தலே விபர்யயம் என்றும், ஞாபகங் கூறலே அபதேசம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, அவ்வுத்திகளின் பொருளியைபுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. எனவே இவ்வுத்திகளிற் பெரும்பாலன ஒத் திருப்பதாகக் கூறியது உண்மையல்ல வென்பது தேற்றம். அன்றியும் அவர்கள் இங்ங்ணம் இருநூல்களுக்கும் ஒவ்வா நிலைமையினை நன்குணர்ந்தே இவ்வட நூலார்க்கும் இத்தமிழ் நூலார்க்கும் உத்திவகையுள் ஒத்த முதனூல் இ.தென்று இன்னுந் துணிதற்கில்லே' என முடிவாகக் கூறிவிட்டார்கள். எனவே தொல்காப்பியப் பொருளதிகார விறுதியிற் காணப்படும் உத்திவகை பற்றிய சூத்திரம், கெளடலியரது அர்த்தசாஸ்திரத் தையோ அன்றிச் சுசுருதம் முதலிய நூல்களையோ பின்பற்றியதன் றென்பது புலனுதலின், தொல்காப்பியர் கெளடலியருக்குப் பிற்பட்டவரென்னும் கொள்கை வலியற்ருெழிதல் காணலாம். 'மறைந்த வொழுக்கத்தோரையும் நாளும், துறந்த வொழுக்கம் கிழவோற்கில்லை எனவருங் களவியற் சூத்திரத்தி லுள்ள 'ஒரை யென்னுஞ் சொல் கிரேக்க மொழியைச் சார்ந்த தென்றும் இது வடமொழி வழியாகத் தமிழிற் புகுந்ததென்றும் இதனை வழங்கிய தொல்காப்பியம் கி.பி. 4-ஆம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டதென ஆசிரியர் பெரிடேல் கீத் கூறியுள்ளாரென்றும் இங்ங்னமாக எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல்காப் 1 . தமிழ் வரலாறு பக்கம் 318.