பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii உலகவாழ்க்கையிற் காணப்படும் நலந்தீங்குகளைத் தெளிய உணர்த்தி மக்களைத் தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் ஒளி வளர் விளக்குகளாகத் திகழ்வன இலக்கியங்களாகும். சென்ற காலத்தில் தம்முன்னேர் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் அன்ளுேர்பெற்ற பெருநலங்களையும் தாம் இனி எதிர்காலத்தில் முயன்று பெறவேண்டிய பலவகைச் சிறப்புக்களையும் இப்பொழு துள்ள நிகழ்கால வாழ்க்கையுடன் இணைத்து நோக்கி வாழ்க் கைத் துறையில் முன்னேறுதற்குரிய நல்லுணர்வை வழங்கி மக்கட்குலத்தாரை மேன்மேலும் உயர்ந்த வாழ்க்கையில் நிலை பெறச்செய்யும் பேராற்றல் இவ்விலக்கியங்களுக்கு உண்டு. இவ்வாறு மக்களது நல்வாழ்க்கையை விளக்கமுறச் செய்வன இலக்கியங்களாதலின் இவற்றை இலங்கு நூல்' எனச் சிறப்பித் தார் திருவள்ளுவர். தொல்காப்பியம் முதலாக உள்ள சிறந்த இலக்கண நூல்கள் சிலவும், சங்கத்துச்சான்ருேர் மக்களது வாழ்க்கையினைச் சொல் லோவியஞ்செய்து காட்டும் வகையில் இயற்றியுதவிய பத்துப் பாட்டு எட்டுத் தொகை என்பனவும், மக்கள் அறத்தினுற் பொரு ளாக்கி அப்பொருளால் இன்பம் நுகர்தற்குரிய நெறிமுறைகளை விரித்துரைக்கும் வாழ்வியல் நூலாகத் தெய்வப்புலவர் திரு வள்ளுவர் அருளிய திருக்குறளும், அதனையடியொற்றியமைந்த நாலடியார் முதலிய கீழ்க்கணக்கு நூல்களும், சேரமுனிவராகிய இளங்கோவடிகள் அருளிய இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலையாகிய சிலப்பதிகாரம் முதலாகவுள்ள அழகிய பெருங்காப் பியங்கள் சிலவும், எல்லாம் வல்ல இறைவனது திருவருளை நிரம்பப்பெற்ற நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலிய அருளா சிரியர்கள் திருவாய் மலர்ந்தருளிய அருள் நூல்கள் பலவும், சமய நூல், ஒழுக்கநூல், சோதிடநூல் முதலிய பலவும், மருத்துவ நூல் கள் பலவும், புராணங்கள் பலவும், கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்தங்கள் பலவும் ஒருங்