பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 தொல்காப்பியம் தீம்புனலுலகமாகிய மருத நிலத்தில் வேந்தனைத் தெய்வமாகக் கருதி வழிபடும் முறையும், பெருமணலுலகமாகிய நெய்தல் நிலத்தில் வருணன் வழிபாடும்தோன்றி நிலைபெற்றன. நிலத்திற் கேற்பத் தோன்றிய இத்தெய்வ வழிபாடுகளே, "மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” எனவருஞ் சூத்திரத்தால் தொல்காப்பியனர் வகுத்துரைத் துள்ளார். நானிலத்தவர்களும் தாம் தாம் வாழும் சூழ்நிலைக் கேற்பத் தம் உள்ளத்தில் வகுத்தமைத்துக் கொண்டனவே இந் நிலத் தெய்வ வழிபாடுகளென்பதும். இவற்றுள் உயர்வு, தாழ்வு கற்பித்தல் பண்டையோர் கருத்தன்றென்பதும் மேல்எடுத்துக் காட்டிய தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது புலனும். மாயோன் சேயோன் எனத் தெய்வங்களுக்கு நிறம்பற்றிப் பெயர் கூறப்படுதலால் இத்தெய்வங்களுக்குத் திருவுருவமைத்து வழி படும் வழக்கமும் தொல்காப்பியனர் காலத்துக்கு முற்பட்ட தொன்மையுடையதென்பதும் நன்கு பெறப்படும். முல்லை நிலத்துக் கோவலர், தம்மால் மேய்க்கப்பெறும் ஆனிரைகள் பாற்பயன் தருதல்வேண்டி காயாம்பூ வண்ணளுகிய திருமாலைப் பரவிக் குரவையாடுதலும், குறிஞ்சி நிலத்துக் குறவர், நறுமலரெழுதரு நன்மணம்போன்று உயிர்க்குயிராய் விளங்குந் தெய்வமணமாகிய வெறியினையறியுஞ் சிறப்புடைய வேலனை யழைத்து வெறியாடச்செய்து, செங்காந்தள் நிறவண்ணகிைய சேயோனை வழிபடுதல், மருத நிலத்து வாழும் உழவர், மலர் தலையுலகிற்கு உயிரெனச் சிறந்த வேந்தனை வழிபட்டு விழவயர்