பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #2% தலும், நெய்தல் நிலத்துப் பரதவர், வலைவளஞ் சுரக்கவேண்டி வருணனைப் பரவுதலும் தமிழகத்துப் பண்டை நாளில் நிகழ்ந்த நானில மக்களின் தெய்வ வழிபாடுகளாகும். இவ்வழிபாடுகளே பன்றி, வெற்றி விளக்குங் கொற்றவையாகிய பழையோள் வழி பாடும் தறுகண்மைமிக்க தமிழ் மறவர்களால் மேற்கொள்ளப் பெற்றது. முருகவேள் வழிபாட்டின் சிறப்பினை வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள் என்ற தொடராலும், காயாமலர்வண்ணனுகிய மாயோன் சிறப்பினை'மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவைநில்ை என்ற தொடராலும், கொற்றவை வழிபாட்டின் பயனுகவுளதாம் தறுகண் உணர்வினைச் சிறந்த கொற்றவைநிலை என்ற தொடராலும் ஆசிரியர் தொல்காப்பியனர் புறத்தினை யியலிற் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். தெய்வத்தினை நிலவகையால் வகுத்துக்கூறிய தொல்காப் பியஞர், நிலப்பாகுபாடின்றி எல்லா நிலத்துக்கும் உரியநிலையில் எங்கும் நீக்கமற நிறைந்த முழுமுதற் பொருளைக் கடவுள் என்ற பொதுப்பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளார். நிலந்தோறும் வேறுவேறு பெயர்களால் உருவமைத்து வழிபடப்பெறும் எல்லாத் தெய்வங்களும் பொருளால் ஒன்றேயென்பது பண்டைத் தமிழ்ச் சான்றேரது துணியாகும். இங்ங்ணம் தெய்வ வழிபாட்டு முறையில் ஒற்றுமையுணர்வு நிலவிய காலத்தில் வாழ்ந்தவர் தொல்காப்பியனுராதலின், அவர் தம் காலத்தில் நிலந்தோறும் நிகழ்ந்த தெய்வ வழிபாடுகளெல்லாவற்றையும் ஒத்த மதிப்புடன் தமது நூலிற் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். 'வினையி னிங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதல்நூ லாகும்" எனவரும் மரபியற் சூத்திரத்திலே தூய மெய்யுணர்வே இறை வனது திருமேனியென்றும், அவன் ஒருவனேயென்றும் தொல்