பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 தொல்காப்பியம் காப்பியர் கூறுவர். இவ்வாறே ஆசிரியர் திருவள்ளுவனரும் வாலறிவன் என்ற தொடரால் கடவுளின் இயல்பை விளங்க வுரைத்தமை இவண் ஒப்புநோக்கத்தகுவதாகும். கடவுள் என்னுஞ் சொல், இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவொண்தை நிலையில் எல்லாத் தத்துவங்களையுங் கடந்து விளங்கும் முழுமுதற் பொருளைக் குறித்து வழங்கும் காரணப் பெயராகும். எல்லாப் பொருள்களையும் உள்நின்று இயக்குபவன் இறைவனதலின் இயவுள் என்ற பெயரும் அவனுக்குரியதாயிற்று: இறைவன் என்னுஞ்சொல், யாண்டும் பொருள்கள் தோறும் நீக்கமற நிறைந்து விளங்குபவன் என்னும் பொருளுடையதாய்க் கடவுளைக் குறித்து வழங்கும் காரணப் பெயராகும். எனவே எல்லாப்பொருள்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இயக்கி நின்று எல்லாத் தத்துவங்கனையும் கடந்து விளங்கும் முழுமுதற் பொருளையே கடவுள், இயவுள், இறைவன் எனப் பல பெயர் களாலும் நம் தமிழ் முன்ளுேர் போற்றியுள்ளார்களென்பது நன்கு துணியப்படும். கடவுளேக் குறித்து வழங்கும் காரணப் பெயராகிய இறைவன் என்னும் சொல், வேண்டுதல் வேண்டாமை யிலா கிைய அப்பெருமானப்போன்று யாவர் மாட்டும் விருப்பு வெறுப் பின்றி நடுநிலையுடையவனுகி அறவோர்க்கு அருளியும் அறமிலா தாரை யொறுத்தும் ஆளவல்ல வேந்தனைக் குறித்த பெயராகவும் வழங்கப்பெறுவதாயிற்று. இச்சொல்லின் பொருட்டன்மை முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட், கிறையென்று வைக்கப் படும் எனவரும் திருக்குறளால் இனிது புலனுதல் காண்க. தான் அறநெறியிற் சிறிதும் பிழையாது நடந்து தன் குடிமக்களைப் பிறர் நலியாமற் பாதுகாத்தலையுஞ் செய்யும் அரசன், பிறப்பினுல் மகனே யாயினும் அவனது செயலின் உயர்வினலே கண்கண்ட கடவுள் என மாந்தராற் சிறப்பித்துப் போற்றப் பெறுவான் என்பது மேற்காட்டிய குறளின் பொருளாகும். இறைவேறு மன்னன்வேறு என்பதும் மன்னனுக்கு இறையென வழங்கும் பெயர் உபசார