பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii கியைந்த தொகுதியே இக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூற்கருவூலமாகும். தமிழ் மக்களது பேரறிவுச் செல்வங்களாகிய இந்நூல்களின் தோற்றம், இவற்றை இயற்றித்தந்த ஆசிரியர்களது வரலாறு, அவர்கள் காலத்துத் தமிழ் நாட்டின் அரசியல் நிலை, மக்களது வாழ்க்கைமுறை, சமயநிலை, நூல் நுதலிய பொருள் ஆகிய வற்றை நன்காராய்ந்து கால முறைப்படி தமிழிலக்கியங்களின் வரலாற்றினை எழுதி வெளியிடுதல் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் சிறந்த தமிழ்ப்பணியாயிற்று. இக்காலத்துள்ள பழைய தமிழ் நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும் முற்காலத்திருந்த தமிழ்நூல் வகையினையும் செய்யுள் வகைகளையும் உலக வழக்காகிய நெறிமுறைகளையும் அறிதற்குச் சிறந்த கருவியாகவும் விளங்குவது தமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியமே யென்பது தமிழறிஞர் பலர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். ஆகவே இத் தொல்காப்பியத் தைப் பற்றிய வரலாறு தமிழிலக்கிய வரலாற்று வரிசையில் முதற் பகுதியாகக் கொள்ளப்பெற்றது. ஒரு மொழி இலக்கண இலக்கிய வரம்பின்றி நாளும் ஒருவகையாய்த் திரிபடைந்து மாறுபடுமானல் முன்னுள்ளோர் கருத்தைப் பின் வந்தவர்களும் இன்றுள்ளார் கருத்தை இனி வருவோர்களும் உணர்ந்து கொள்ளுதற்கு வழியின்றி அம்மொழியின் வழக்கியல் சிதைந்து கெடுதல் இயல்பே. பல்லாயிரம் ஆண்டுகளாக வளம்பெற்று வரும் நம் தாய்மொழியாகிய தமிழ், வேற்றுமொழிக் கலப்பாலும் மக்களது சோர்விலுைம் சிதைந்து கெடாதபடி அதற்கு வரம்புகோலிப் போற்றி வளர்ந்த பெருமை தமிழ் முதல் நூலாகிய இத்தொல் காப்பியத்திற்குரிய தனிச் சிறப்பாகும். இந்நூல், பெயரளவில் இலக்கணநூல் வகையிற் சேர்த்துக் கூறப்படினும் இதன்கண் எழுத்தும் சொல்லும் பொருளும் என