பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 135, நச்சினர்க்கினியர் இச்சூத்திரப் பொருளை விளக்கியுள்ளார். வினையென்பது அறத்தெய்வம் என்பர் சேவைரையர். 'காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லா வுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன், உடம்பு என்பது மனம்புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினுற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு இதனை மூலப்பகுதி எனினும் ஆம், பால்வரை தெய்வம் என்பது ஆனும் பெண்ணும் அலியுமாகிய தன்மையை வரைந்து நிற்கும் பரம் பொருள். வினையென்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத் திரளாய் உலகு விளக்குவது. திங்கள் என்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள்செய்வது, சொல் என்பது எழுத்தினன் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லின்ை இயன்ற மந்திரம் விட முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று' என்பது தெய்வச் சிலையார் கூறும் விளக்கமாகும். இச்சூத்திரத்துள் வந்துள்ள உலகம், உயிர், உடம்பு என்பனவும் தெய்வத் தொடர்பினையே யுணர்த்தி நின்றன என்பது தெய்வச்சிலையார் கருத்தாகும். பூதம், ஞாயிறு, திங்கள் என்பன தெய்வ ஆற்றலைப் புலப்படுத்துவனவாக மக்களால் மதித்து வழிபடப் பெறுவனவாம். வஞ்ச மனத்தான் படிற்ருெழுக்கம் பூதங்க ளந்து மகத்தே நகும் எனத் திருவள்ளு வரும் ஞாயிறு போற்றுதும் திங்களைப் போற்றுதும் என இளங்கோவடிகளும் கூறுவன இச்சூத்திரப் பொருளை வலியுறுத்து வனவாம். இதன்கண் பால்வரை தெய்வம் எனவும் வினை எனவும் அடுத்தடுத்துச் சொல்லப்பட்டன. இவையென அறிதல்வேண்டும். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள் எனத் தெய்வச்