பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #3? துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது எனச் சேனவரையரும் நச்சினர்க்கினியரும் கூறிய பொருளே தொல் காப்பியனர் கருத்தினை இனிது புலப்படுப்பதாதல் நன்கு துணியப் படும். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுந்தன்மைய தன்றென்பதும், உயிர்கள் செய்யும் நலந் தீங்குகளாகிய இரு வினைகளுக்கேற்ப அவற்றின் பயன்களே வகுத்து நுகர்விக்கும் முதல்வைெருவன் உளனென்பதும் தொல்காப்பியஞர் துணி பாகும். தொல்காப்பியனர் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கண்டு அறிவுறுத்திய இவ்வுண்மையை,

  • செய்வினையுஞ் செய்வானும்

அதன் பயனுஞ் சேர்ப்பாலும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்" எனவருந் தொடரால் சேக்கிழார் பெருமான் தெளிவாக விரித் துரைத்தமை இவண் ஒப்புநோக்கத் தகுவதாகும். பால்வரை தெய்வம் என்னுந் தொடர், பால்வேறு அதனை வரைந்து நுகர்விக்குந் தெய்வம் வேறு என்னும் மெய்மையினை விளக்குவதாகும். தெய்வத்தால் வகுக்கப்பெறும் முறையே பால் எனவும் வகையெனவும் ஊழ் எனவும் வழங்கப்படுவதாம். இந் நுட்பத்தினை வகுத்தான் வகுத்த வகையல்லாற்கோடி, தொகுத் தார்க்குந் துய்த்த லரிது’ எனவருங் குறளால் திருவள்ளுவர் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். ஊழ்வினை தானே யுருவெடுத்து வந்து செய்தானப் பற்றும் ஆற்றலுடையதன்றென்றும், எல்லாப் பொருள்களையும் ஒழுங்குபெற வகுத்து இயக்கி நிற்கும் இறைவன் வகுத்த முறைதானே ஊழ் எனப்படுமென்றும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர், வகுத்தான் வகுத்த வகை என்ற தொட