பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 தொல்காப்பியம் விக்கும் ஆற்றலுடையதன்றென்பது பண்டைத் தமிழர் துணியாகும். த்ென்ேத்தைக் குறித்தும் வினையினைக் குறித்தும் தொல்காப் பியனர் காலத் தமிழ் மக்கள்கொண்ட இத்துணியினைப் பால்வரை தெய்வம் எனவரும் தொல்காப்பியச் சொற்ருெடர் உய்த்துணர வைத்தல் உணர்தற்குரியதாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் இறைவன் என்பதும். அவன் முற்றுணர்வினன் என்பதும் ஆகிய உண்மையினை வினை யினிங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்னுந்தொடர் நன்கு விளக்குவதாகும். வினையின்நீங்கி விளங்கிய அறிவினையுடையான் முதல்வன் எனவே, வினையின் நீக்கி விளக்கப்பெறும் அறிவினை யுடையன உயிர்கள் என்பதும் உய்த்துணரவைத்தவாரும். வினை யின் நீங்கியவன் முனைவன் எனவே வினை காரணமாகவுளவாம் வேண்டுதல் வேண்டாமையென்பன அவனுக்கு இலவென்பதும் அவையில்லை யாகவே தூயமெய்யுணர்வினனுகிய அவ்விறைவன் பிறப் பிறப்பில்லாதவன் என்பதும் தானே பெறப்படும். கடவுளே வழிபடுதல் மக்களது முதற்கடமை என்பதும் தமக் குரிய வழிபடுதெய்வத்தின் திருவருளால் குற்றமற்ற பெருஞ் செல்வத்துடன் தம் குடும்பம் வாழையடி வாழையாக இவ்வுலகில் நிலைபெற்று வளர இன்புற்று வாழலாமென்பதும் ஆகிய வுண்மை யினைப் பண்டைத் தமிழ்ச் சான்ருேர் மக்களுக்கு அறுவுறுத் தினர்கள். நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறங் காப்ப இல்லற முதலிய நல்லறங்களாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு புதல்வர்ப்பயந்து புதல்வரும் இப்பெற்றியராகி நீடு வாழ்மின் என்று தம்பால் அன்புடையாரை வாழ்த்தி ஞர்கள். இவ்வாறு தெய்வத்தைப் புறம் நிறுத்தி அத்தெய்வத்தின் நல்லருளால் நீடுவாழ்வீராக என வாழ்த்தும் வாழ்த்தியல், புறநிலை வாழ்த்து என வழங்கப்பெறும். எடுத்துக்கொண்ட செயல் இனிது நிறைவேறுதற்கு ஏதுவாகிய கடவுள் தோன்ருத் துணையாய் நின்று நின்னைப் புறங்காப்பக் குற்றந்தீர்த்த செல்வத்