பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 143 காணலாம். நெல்லினுற் கட்டுப் பார்த்தும் கழங்கு பார்த்தும் முருகனை வழிபடும் வேலனைக்கொண்டு வெறியாடச் செய்து அவ்விழாவில் வேலன்மேல் தெய்வமுற்று நிகழ்ந்தனவுரைக்க உற்றன அறியும் முறை மலைவாணர் வழக்கமாகும். வெறி யென்பது மணம் என்னும் பொருளுடைய சொல்லாகும். அச் சொல் தெய்வமணமாகிய முருகு, என்னும் சிறப்புப் பொருளில் தொன்னூல்களில் வழங்கப் பெற்றுளது. தெய்வமணமாகிய முருகு வழிபடுவார்மேல் ஆவேசித்து நிற்கும் இயல்பினை வெறி யென்பர். தம்மால் வழிபடப்பெறும் முருகன் வேலேந்தி யாடும் வேலன்மேல் ஆவேசித்து நின்று முக்காலத்தும் நிகழ்வனவற்றை யறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்துடன் செய்யப்படும் வழி பாடு வெறியாட்டெனப்படும். இவ்வழிபாட்டின் பயணுக மறை வில் நிகழ்ந்தனவும் தெய்வத்தால் வெளியாகிவிடுதலுண்டு. ‘கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக்கண்ணும் (கள-25) எனவும், வெறியாட்டிடத்து வெரு வின்கண்ணும் (கள்-21) எனவும் வருந் தொடர்களால் இவ்வழக் கத்தின் தன்மையினைத் தொல்காப்பியஞர் குறிப்பிடுகின்றர். இன்னது விளையுமென்று அறியாது அஞ்சுதலையுடைய களவுக்காலத்தே, ஒருவனும் ஒருத்தியுமாகிய அன்புடையாரிருவர் நண்புசெய் தொழுகுங்கால், அவர்கள் வருந்தா வண்ணந் தோன்ருத் துணையாய்நின்று அருள் புரிவதோர் கடவுள் உண் டெனவுணர்ந்த தோழி. அவ்விருவர்க்கும் திருமணம் நிறைவேறு வதாக எனக் கடவுளே ஏத்திவழிபடு மியல்பின நாமக்காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும் என்ற தொடராலும், மனைமாட்சியிற் சோர்வில்லாத தலைவியைத் தலைவன் மணந்துகொள்ளுதல் வேண்டித் தெய்வத்தைப் பரவிய தோழி தான் வேண்டிய வண்ணமே அவ்விருவர்க்குந் திருமணம் நிறைவேறியவழித் தெய்வத்திற்குப் பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமென விரும்புந் திறத்தினை அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் என்ற தொடராலும், தலைவனை