பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i44 தொல்காப்பியம் மணந்து கற்புக்கடம்பூண்ட தலைகள் தன் கணவற்குத் தொழு குலமாகிய தெய்வத்தினை அஞ்சியொழுகு மியல்பினைத் தெய்வ மஞ்சல் என்னும் மெய்ப்பாட்டினலும், தலைவனுடன் போகிய தலைவிக்கு வழியில் தீங்கு நேராதவாறு அருள்புரிதல் வேண்டு மெனச் செவிலித்தாய் தெய்வத்தை வழிபடும் திறத்தினைத் தெய்வம் வாழ்த்தல்' என்பதலுைம் தொல்காப்பியளுள் அறிவுறுத்துகின்ருர், மேலெத்துக் காட்டிய குறிப்புக்களால் ஆசிரியர் தொல்காப்பியஞர் காலத்துத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டிற்கு அமைந்த சிறப்புரிமை இனிது புலளுதல் காணலாம். இனி, அரசியல் வாழ்வில் தெய்வ வழிபாட்டிற்கமைந்த சிறப்பினைக் காண்போம். அரசனது வெற்றிக்கு அடையாளமாகிய கொடியானது பிறவேந்தர் கொடியினும் சிறப்புற்று விளங்குதலும் வேந்தன் பகைவரது அரணையழித்தலும் மன்னன் தன்னைச் சார்ந்தோரனைவர்க்கும் வரையாது வழங்குதலும் எனக் குற்றமற்ற சிறப்பினுல் முற்படப் புகழ்தற்குரிய புறத்துறைகள் மூன்றையுங் குறித்து நல்லிசைப் புலவர் பாடுதற்குரிய பாடாண்திணை பற்றிய பாடல்கள் எல்லாவுயிர்க்குந் தோன்ருத்துணையாய் நின்று இன்னருள் சுரக்கும் முழுமுதற் கடவுளே வாழ்த்திய குறிப்புடன் விரவிவரும். இம்முறையின, ' கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே " எனவரும் சூத்திரத்தால் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். அரசியல் வாழ்விலுண்டாகும் வெற்றிகளுக்கெல்லாம் உயிர்க்குயிராய் விளங்கும் கடவுளின் திருவருளே உறுதுணையாய் நின்று உதவுந் திறத்தைப் புலத்துறை முற்றிய சான்ருேர் வேந்தர் முதலி யோர்க்கு நன்கணம் அறிவுறுத்தி அவர்களுடைய உள்ளத்தைத்