பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv வகைப்படுத்து விளக்கப்பெறும் உலக வழக்கும் செய்யுள் வழக்கு மாகிய மொழிநடை பற்றிய தமிழ் இலக்கண விதிகளைக் கூர்ந்து நோக்குங்கால், அவற்றுக்கெல்லாம் நிலைக்களமாக எத்துணையோ சிறந்த பல இலக்கியங்களும் அவைபற்றிய விதிமுறைகளும் நம் தமிழ் மொழியில் நிலைபெற்று வழங்கியிருத்தல் வேண்டுமென்ப தும், இந் நூலாசிரியராகிய தொல்காப்பியனர் தம் காலத்திலும் தமக்கு முன்னும் இயற்றப்பெற்று வழங்கிய அந் நூல்களே எல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றின் இயல்பனைத்தும் விளங்கத் தொல்காப்பியமாகிய இந்நூலை இயற்றி உதவினர் என்பதும், எனவே இந்நூல் பழந்தமிழிலக்கியங்களின் இயல்பினையும் பிற் காலத்தில் தோன்றி வழங்கும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத நல்லியல்புகளையும் தன்பாற்கொண்டு திகழும் சிறப்புடைய தென்பதும் நன்கு புலம்ை. தமிழியல் நூலாகிய இத் தொல்காப்பியத்தைப் பற்றியும் இதனை இயற்றியுதவிய ஆசிரியர் தொல்காப்பியரைது வரலாற் றைப் பற்றியும் அவர் வாழ்ந்த காலநிலைபற்றியும் உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானல் இத் தொல்காப்பியம் முழுதினே யும் இதற்கு இளம்பூரணர் பேராசிரியர் நச்சிளுர்க்கினியர் முதலிய பண்டையுரையாசிரியப் பெருமக்கள் அரிதின் முயன்று எழுதியுள்ள உரைகளுடன் ஒப்புநோக்கிப் பயிலுதல் வேண்டும். இந் நூலைப் பற்றியும் இதன்பின் தோன்றிய சங்க இலக்கியங்களைப் பற்றியும் நெடுங்காலமாக வழங்கிவரும் செய்திகளையும் இறையனர் களவிய லுரையாசிரியர், அடியார்க்குநல்லார் முதலிய பண்டைச் சான் ருேர்கள் கூறியவற்றையும் இக்கால ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கூறும் கருத்துக்களையும் கூர்ந்து நோக்கித் தெளிதல் வேண்டும். சமயச்சார்பு இனச்சார்பு முதலியன பற்ருது காய்த லுவத்த லகற்றி ஆசிரியர் தொல்காப்பியனர் வாழ்ந்தகாலம் இதுவென ஆராய்ந்து உண்மை காணுதல் வேண்டும். இவ்வகை யால் தொல்காப்பியத்திற்குரிய அகச்சான்றுகளையும் சங்க இலக்