பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு iáš திருத்துதல்வேண்டுமென்பது தொல்காப்பியனர் கருத்தாதல் மேற்காட்டிய சூத்திரப் பொருளால் இனிது பெறப்படும். எல்லாம் வல்ல கடவுளே நாயகனுகவும் தம்மைத் தலைவியாக வும் கருதி இன்றியமையாத அன்புரிமையில்ை கடவுளே விரும்பி வழிபடும் மரபு தொல்காப்பியனர் காலத்திலேயே தமிழகத்தில் நிலைபெற்று வழங்கியதெனத் தெரிகிறது. இச்செய்தி, ‘காமப் பகுதி கடவுளும் வரையார் ஏளுேர் பாங்கினும் என்மஞர் புலவர்” என வரும் புறத்திணையியற் சூத்திரத்தால் உய்த்துணரப்படும். இத்துறைப் பொருளாகக் கடவுள்மாட்டுத் தெய்வப் பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப் பெண்டிர் நயந்த பக்கமும் பாடப் பெறும் என்பர் இளம்பூரணர். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங் களால் ஆகியதே இவ்வுலகம் என்பார், நிலந்தீ நீர் வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்கம் உலகம் என்ருர். பலவேறு அவயவப்பகுப்புடையதாய்ப் பொறிவாயிலாகச் சுட்டியறியப்படுத் தன்மை இவ்வுலகின்பாற் காணப்படுதலின் இவ்வுலகம் என்றும் ஒரு நிலையில் நிற்பதன்ரும். இதனியல்பினைப் பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்ருனும், நில்லாவுலகம் புல்லிய நெறித்தே எனவருங் காஞ்சித்திணைச் சூத்திரத்து நில்லாவுலகம்' என்பதனுல் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். காணப்படும் இவ்வுலகம் முதலிய எல்லா அண்டங்களுக்கும் மூலமாகிய நுண்பொருளே உலகம் எனவும், இவற்றின் இயக்கத்திற்கு உறுதுணையாகிய காலதத்துவத்தைக் 'காலம் எனவும், காலம் உலகம் உயிரே யுடம்பே' என்னுஞ் சூத்திரத்தில் ஆசிரியர் கூறினமை முன்னர் விளக்கப்பட்டது. நிலமுங் காலமும் ஆகிய இவை உயிர் வாழ்க்கைக்கு அடிப்பட்ை பாகிய முதற்பொருள் என்பதனை முதலெனப்படுவது நிலம்