பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 14? தாக்கியவழி உடம்பினுல் உற்றறியும் ஊற்றுணர்வும் இரை முதலியனவற்றைச் சுவைத்தறியும் நாவுணர்வும் ஆகிய ஈரறி வுடையன. கரையான், எறும்பு முதலியன முற்கூறிய ஊற்றுணர் வும், சுவையுணர்வும் என்னும் இரண்டுடன் மோந்தறிதலாகிய முக்குணர்வும் ஒருங்குடையன. ஆகவே அவை மூவறிவுயிர் எனப்படும். நண்டு, தும்பி என்பன முற்கூறிய மூவறிவுடன் கண்ணுணர்வும் ஒருங்குடையனவாதலின் நாலறிவுயிர்கள் எனப் படும். நாற்கால் விலங்கும் பறவையும் முற்கூறிய நாலறிவுடன் ஒசையறிவாகிய செவியுணர்வும் என ஐம்பொறியுணர்வும் ஒருங் குடையன. முற்கூறிய ஐம்பொறியுணர்வுடனே நன்றுந்தீதும் பகுத் துணரும் மனவுணர்வும் பெற்றமையால் மக்கள் ஆறறிவுயிரெனப் படுவர். ஆருவதறிவாகிய மனவுணர்வு மக்களுயிர்க்கேயுரிய சிறப்பியல்பாகும். இங்கு வகைப்படுத்துணர்த்திய அறுவகையுயிர் களுள் எடுத்துரைக்கப்பட்டனவேயன்றி அவற்றின் கிளையின வாகவும் ஒத்த பிறப்பினவாகவும் வருவன பிறவும் உள. அவை இன்னவெனவுணர்ந்து அவையெல்லாவற்றையும் இங்கு எடுத்துக் கூறிய அறுவகையுயிர்களுள் இன்னதன் பாற்படுமென முன்னை யோர் அறிந்து அடக்கினர். இங்ங்ணம் காணு மரபினவாகிய உயிர்களைக் காணப்படும் உடம்பினுற் கண்டுணர்ந்து உடம்பின் கண் அமைந்த அறிகருவிகளின் வாயிலாக அவற்றை ஆறுவகை யாக முன்னுள்ளோர் பகுத்த முறையினை, 'ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதைெடு நாவே மூன்றறிவதுவே அவற்ருெடு முக்கே நான்கறிவதுவே அவற்ருெடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்ருெடு செவியே ஆறறிவதுவே அவற்ருெடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே."