பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தொல்காப்பியம் மக்களது நல்லறிவின் பயனுய் அமைவது ஒழுக்கம். வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ச்சியடைதற்குக் கருவியாகிய ஒழுக்கவுணர்வுடைய மக்கட் குழுவினர் உயர்திணையெனச் சிறப் விக்கப் பெற்றர்கள். ஒழுக்கவுணர்ச்சி யில்லாத விலங்கு முதலிய தாழ்ந்த உயிர்களும் கல், மண் முதலிய உயிரல் பொருள்களும் அஃறிணையெனப் பிரித்து விலக்கப்பட்டன. இங்ங்ணம் உலகப் பொருகள்ளெல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணையெனச் சொல் வகையால் இரு திறமாக வகுத்துரைத்தலும் ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என ஐம்பாலாகப் பகுத்து வழங்குதலும் த்மிழ் மொழியிலன்றி வேறு எம்மொழிகளிலுங் காணப்படாத சிறப் பியல்புகளாம். மக்கட் குலத்தாரை உயர்திணையாக உயர்த்துவது மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாகும். மேன்மேலும் உயர்வைத் தருவது ஒழுக்கமேயாதலின் அதனைத் தம் உயிரினும் சிறந்ததாகத் தமிழ் முன்னேர் கடைப்பிடித்தொழுகினர். ஒழுக்க நெறியினை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மக்களின் குடும்ப வாழ்வும் அரசியல் வாழ்வும் உருப்பெற்று வளர்ந்தன. இவ்வுலக வாழ்வுக்கு இன்றியமையாச் சிறப்புடையதாக வலியுறுத்துரைக்கப் பட்டதே ஒழுக்க நெறியென்பார் கட்டமையொழுக்கம் என்றும், அவ்வொழுக்க நெறியிற் சிறிதும் வழுவாது வாழும் சான்ருேள் தம் சால்பினது வெற்றி எல்லாராலும் கண்டு பாராட்டிப் போற்றுதற்கேற்ற நல்ல காட்சியாகும் என்பார் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை என்றும் ஒழுக்கத்தினது விழுப்பத் திணை ஆசிரியர் வற்புறுத்துரைத்தார். அறவோராகிய அந்தணர் பாலும் சான்ருேர்கண்ணும் அழியாச் சிறப்பினையுடைய ஏனைப் பெரியோர்கண்ணும் இவ்வாறு ஒழுகுதல் வேண்டுமென ஒருவர் ஒருவர்க்கு அறிவிக்கும் முறைமையினே அந்தணர் திறத்தும் சான்ருேர் திறத்தும், அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு என்பர் ஆசிரியர். ஒழுக்கத்தைப் பேணுது தலைவன் வழுவியது கண்ட தலைவி, தன் கணவனது பழி நிலைக்கு நானுந் திறத்தைப் பேணு ஒழுக்கம் நாணி: