பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 தொல்காப்பியம் வகுத்த முறையே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் களாக வகுத்தருளிச் செய்தமை இவண் ஒப்பு நோக்கத் தகுவதாகும். இப்பிறப்பிற் குரியனவாகிய இம்மைச் செல்வமும் வரும் பிறப்புக்களிலும் துணை செய்வனவாகிய அறச் செயல்களும் பிறப் பற முயலும் பெருநெறியாகிய துறவு நிலையும் ஆகிய இம்மூன்று நிலைகளும் மக்கள் வாழ்க்கையின் திறங்களென முன்னத் தமிழ்ச் சான்றேர் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். கணவனும் மனைவி யுமாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மக்களொடு மகிழ்ந்து மனையறம் பேணிச் சுற்றத்தாரைப் போற்றி விருந்தோம்பி எல்லோர்க்கும் ஆதரவாக வாழ்வதே இம்மை வாழ்வெனப்படும். கணவனும் மனைவியுமாக இல்லறம் நிகழ்த்துவோர் தாம் நுகர வேண்டிய இன்பங்களை யெல்லாம் நுகர்ந்து முடித்து முதுமைப் பருவந் தொடங்கிய நிலையிலே மிக்க காமத்து வேட்கை நீங்குதல் இயல்பு. இவ்வாறு ஐம்புல நுகர்ச்சியிற் பற்றுத் தீர் தலாகிய இத்துய வொழுகலாற்றினைக் காமம் நீத்த பால் என ஆசிரியர் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இளமையும் யாக்கையும் செல்வ மும் நிலையா எனத் தெளிந்து எல்லாவுயிர்களிடத்தும் இரக்க முடையவராய் உலக வாழ்விற் பற்றற ஒழுகுதல் துறவு நிலையா கும். இத் துறவினை 'அருளொடு புணர்ந்த அகற்சி யென்பர் ஆசிரியர். செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணு உவகை என்பன அறுவகைக் குற்றங்கள். வெல்லுதற் கரிய உட்பகையாகிய இவ்வறுவகைக் குற்றங்களையும் சான்ருேர் தம் உள்ளத்துறுதியால் வென்று மேம்படும் திறம் அரும்பகை தாங்கும் ஆற்றல்' எனப்படும். உட்பகையாகிய இக்குற்றங்களே ‘அரும்பகை எனத் தொல்காப்பியனர் கூறியது போலவே 'குற்றமே அற்றந் தருஉம்பகை' எனத் திருவள்ளுவரும் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.