பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 153 மக்களது நல்வாழ்வினைச் சிதைப்பன மனத்தின்கண் உண்டாகும் தீய நினைவுகளேயென்பதும் அத்தகைய மனமாக களைக் களைய வல்ல நல்லுணர்வுடையவர்களே ஆற்றல்மிக்க நன்மக்கள் என்பதும் தொல்காப்பியனர் கருத்தாதல் அரும்பகை தாங்கும் ஆற்றலானும் எனவருந் தொடரால் நன்கு துணியப் படும். ஒருவனும் ஒருத்தியும் மணந்து மனையறம் நிகழ்த்தி ஒருங்கு வாழ்ந்ததின் பயணுக மறுபிறப்பில் அவ்விருவரையும் கணவனும் மனைவியுமாக ஒன்றுவித்தலும் அன்றி அவ்விருவரையும் பிரித்து வேருக்குதலும் என ஊழ் இரு வகைப்படும். கணவன் மனைவி ஆகிய அவ்விருவருள்ளமும் அன்பினுற் சிறந்து பிறப்புத்தோறும் நல்வினைக்கண்ணே ஒற்றித்து நிற்றலால் உயர்ந்ததன்மேற் செல் லும் மனநிகழ்ச்சி அவ்விருவர்க்கும் உண்டாகி மறுமையினும் அவ்விருவரையும் புணர்க்கும் பாலாய் ஆகூழ் எனப்படும். கணவனும் மனைவியுமாக வாழ்வோர் தம்முள் அன்பின்றிப் பிணங்கி யொழுகுவராயின், அவர்தம் மன வேறுபாடு அவ்விரு வரையும் மறுபிறப்பிற் கூடாதவண்ணம் பிரிக்கும் பாலாய் வேறு படுத்துவதாம். ஆகவே அன்புடையார் இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றிய நல்வினையின் உயர்ச்சியினலே அவ்விருவரையும் மறுபிறப்பினுங் கூட்டுவதாகிய உயர்ந்த பாலின் ஆணையிஞலே ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்படுவர் என்பது முன்னேத் தமிழாசிரியர் துணியாகும். இவ்வுண்மையினை, " ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப ” என்பதலுைம், பொறியின் யாத்த புணர்ச்சி என்பதனுலும் தொல்காப்பியனர் விரித்துரைத்துள்ளார். தொல்காப்பியனர்