பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰擎 கியங்கள் பிற்கால நூல்கள் உரைகள் முதலாகவுள்ள மதிப்பிற் குரிய புறச்சான்றுகளையும் தக்க ஆதாரங்களாகக் கொண்டு எழுதப்பெற்றதே இவ்விலக்கிய வரலாருகும். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. அவற்றுள் முதற்பகுதி, தொல் காப்பியமாகிய இந்நூல் தோன்றிய வரலாற்றைப்பற்றியும் இந் நூலை இயற்றிய ஆசிரியர் தொல்காப்பியனுர் வாழ்ந்த காலம் சமயநிலை ஆகியவற்றைப் பற்றியும் விரித்துக் கூறுவதாகும். தொல்காப்பியனர் வாழ்ந்த காலம்பற்றியும் அவரது சமயம்பற்றி யும் மண்டையுரையாசிரியர்கள் கூறியவற்றுக்கு மாருக இக்கால ஆராய்ச்சியாளர் சிலர் கூறிய கொள்கைகளை ஆராய்ந்து துணிய வேண்டி யிருந்தமையால் இப்பகுதி சிறிது விரிவடைந்தது. தொல்காப்பியம் நுதலியபொருளை விளக்கும் நிலையில் அமைந்தது இதன் இரண்டாம் பகுதியாகும். இதன்கண் தொல் காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரமாகிய மூன்று அதிகாரங்களிலும் விரித்துரைக்கப் பெற்ற விதிகள் ஆசிரியர் தொல்காப்பியனர் சொல்நடையை அடியொற்றித் தொகுத்தும் வகுத்தும் விளக்கப்பெற்றன. தொல்காப்பியப் பொருளதிகாரத்திற் சொல்லப்பெறும் மெய்ப்பாடு, உவமம்பற்றிய விதிகளையும் யாப்பிலக்கண அமைப்பினையும் மரபினையும் இக்கால மாணவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவை பற்றிய கருத்துக்கள் இப் பிற்பகுதியில் கூடியவரை விடாது தொகுத்துத் தரப்பெற் றுள்ளன. இதன்கண் தரப்பெற்ற சூத்திர எண்கள் இளம்பூரணர் உரையை அடியொற்றி அமைந்தன. இந் நூலின் தொடர்பாக ஆராய்ந்துகண்ட குறிப்புக்கள் சில உள. இனி மேலும் ஆராய்ந்து காணவேண்டியன பலவாகும். அவை வாய்ப்பு நேருமானல் அடுத்த பதிப்பிற் சேர்க்கப்பெறும். இந்நூல் எழுது தற்கு ஆதார மாகவுள்ள ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுதவிய பெருமக்கள் எல்லோர்க்கும் எனது நன்றி உரியதாகும்.