பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #59 குறிப்பிட்டு விளக்குதலானும், நானிலத்தவர்களும் தாம்தாம் வாழும் நிலத்தியல்புக்கேற்ப வகுத்தமைத்துக் கொண்டன இந் நிலத்தெய்வ வழிபாடுகளாதலானும் இவற்றுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் ஆசிரியர் தொல்காப்பியனுர்க்கு உடன்பாடன்றென்க. நிலந்தோறும் வேறுவேறு பெயர்களால் உருவமைத்து வழிபடங் படும் எல்லாத் தெய்வங்களும் பொருளால் ஒன்றேயென்பது தொல்காப்பியனர் துணியாதலின் முல்லை, குறிஞ்சி முதலிய நிலப் பாகுபாடின்றி எல்லா நிலத்துக்கும் உரிய நிலையில் எங்கும் நீக்கமற நிறைந்த முழுமுதற் பொருளாகிய கடவுள் வழி பாட்டினையே அவ்வாசிரியர் மேற்கொண்டொழுகினரெனக் கோடல் பெரிதும் பொருத்தமுடையதாகும். இனி, ஆசிரியர் தொல்காப்பியனுரைச் சமணசமயத்தவர் எனத்துணிந்து கூறுவாருமுளர். இக்கொள்கையை நிலைநிறுத் துதற்கு அன்னேர் கூறுங் காரணங்கள் பின்வருவனவாம். 1. பனம்பாரளுர் பாயிரத்தில் பல்புகழ் நிறுத்த படிமை யோன் எனத் தொல்காப்பியனர் சிறப்பிக்கப்பெற்றுள்ளார், படிமை என்பது சமண சமய வழக்குச்சொல், அச்சொல் தவவொழுக்கம் என்ற பொருளிற் பிற சமய நூல்களில் வழங்கப்பெறவில்லை. ஆகவே படிமையோன்' எனச் சிறப்பிக்கப்பெற்ற தொல்காப் பியஞர் சமண சமயத்தவர் என்பது தெளியப்படும். 2. அகத்தியனர் மாளுக்கருள் ஒருவராகிய அவிநயனர் சமண சமயத்தவராவரென மகாமகோபாத்தியாய உ.வே.சாமி நாத ஐயரவர்கள் மயிலை நாதருரை முகவுரையிற் குறித்துள்ளார் கள். ஆதலால் அகத்தியர் மாணவருள் ஒருவராகிய தொல் காப்பியரையும் சமணரெனக் கொள்வதில் தடுமாற்றம் உண்டா தற்கில்லை. 1. தமிழ்ச்சுடர் மணிகள், பக்கம். 7.26.