பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 16 மாத்திரைக்கு இலக்கணம் வகுத்துரைத்தலால் சமண் சமயத்தவ ரென்பது எளிதில் ஊகிக்கத்தகும். 5. "ஐ அம்பல் என வருஉம் இறுதி என்பதனுல் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் மூன்று எண்களையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றர். இவற்றுள் தாமரை என்பது கமலம் எனப் பரிபாடலிற் குறிக்கப்பெற்றுளது. எனவே தாமரை முதலிய குறியீடுகள் வடசொற்களின் மொழிபெயர்ப்பென்று ஊகிக்கலாம். வடநூல்களில் பத்மம் என்பதே பெரும்பாலும் வழங்குகின்றது. வெள்ளம் என்பது சமுத்திரம் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் ஆம்பல் என்பது குமுதம் என்பதன் மொழிபெயர்ப்பாகவும் இருத் தல் வேண்டும். வைதிக நூல்களில் ஏகம், தசம், சதம், ஸஹஸ் ரம், ஆயுதம், நியுதம், ப்ரயுதம், அர்புதம், நாயர்புதம், ஸமுத்ரம், மத்யம், அந்தம் என்ற எண்கள் உள்ளன. வைதிக நூல்க ளொன்றிலேனும் குமுதம் என்ற பேரெண் காணப்படவில்லை. சமணர்களுக்குரிய தத்வார்த்தாதிகம சூத்திரத்திற்கு (x-15) உமாஸ்வாதி இயற்றிய ஸ்வோபஜ்ஞ பாஷ்யத்தில் குமுதம்' என்பது எண்ணுக்குரிய பெயராக வழங்கப்பட்டுளது. இதனையே ஆம்பல் என்று தொல்காப்பியர் மொழிபெயர்த்து ஆண்டிருத்தல் வேண்டும். 6. சமணர்கள் இயற்றிய பூர்வீகச் செய்யுள் வகையொன் றின் பெயராகப் பண்ணத்தி என்னுஞ்சொல் வழங்கி வந்துளது. பகவதி வ்யாக பண்ணத்தி, சூர்ய பண்ணத்தி, சந்த பண்ணத்தி என்பவற்றை உதாரணமாகக் காட்டலாம். சமண நூல்களில் தவிர இவ் அரிய பெயர் வேருேரிடத்துங் காணப்பெறவில்லை. விஜ்ஞாபனம் விண்ணுணம் எனப் பாகதச் சிதைவானுற்போல 'ப்ரக்ஞப்தி என்பது பண்ணத்தி என வந்துளது. பாகத நூல் களிற் காணப்படும் செய்யுள் வகையின் இலக்கணத்தைத் தமிழ்ச் செய்யுள் வகைக்குச் சார்த்தித் தொல்காப்பியஞர் கூறுதலால் அவரும் சமணர் என்பது போதரும்.