பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6, 2 தொல்காப்பியம் 7. வைதிக சமயத்தவரால் தொன்றுதொட்டு மேற் கொள்ளப்படாதது ஐந்திர வியாகரணமாகும். புறச்சமயத்தவருள் சமணர் இவ்வியாகரணத்தைப் பெரிதும் போற்றி வந்தனர். 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன், எனக் கூறப்படுதலால் தொல்காப்பியரும் சமண சமயத்தைச் சார்ந்தவரென உய்த் துணரலாகும். இனி, இக்காரணங்களே முறையே ஆராய்வோம். (1) படிமா என்பது சமணச்சமயச் சொல்லேயென்ப தற்குப் பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் மேற்கோள் இல்லை. கி. பி. ஆரும் நூற்ருண்டிற்குப் பிற்பட்ட சமண் சமய நூல்களே இப்பொழுதுள்ளன என ஆராய்ச்சியாளர் கூறுவர். பிற்காலத்து நூல்களில் எங்கேயோ அருகி வழங்கும் படிமா என்னும் பாகதச் சொல்லச் சமண் சமயத்தவர்க்கே உரிமை செய்தல் கூடாது. வடநாட்டிலே கெளதம சாக்கியர் காலத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரும் சமண சமயத்தவரும் தம் காலத்துக்கு முற்பட்ட தவ முனிவர் களின் ஒழுகலாற்றையே அடிப்படையாகக் கொண்டு தமக்குரிய ஒழுகலாறுகளை வரையறுத்துக் கொண்டனர் என்பது ஆராய்ச்சி யாளர் துணியாகும். அன்றியும் சமண புத்த மதங்கள் இந் நாட்டில் தோன்றுதற்குப் பன்னுருண்டுகளுக்கு முற்பட்டுத் தோன்றியவர் ஆசிரியர் தொல்காப்பியனராவர். அவ்வாசிரி யரைக் குறித்துப் பனம்பாரளுர் கூறிய படிமையோன் என்னும் சொல் தன்மையெனப் பொருள்தரும் படியென்னும் முதனிலை யடியாகத் தோன்றிய தனித்தமிழ்ச் சொல்லாகும். இதனைப் ப்ரதிமா என்னும் வடசொல்லின் திரியென்றல் பொருந்தாது. படிமை என்னும் இத்தனித் தமிழ்ச் சொல் தெய்வ வடிவத்தினையும் அந்தணர் சான்ருேர் அருந்தவத்தோர் முதலிய பெருமக்களது 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், பக்கம் 543