பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 தொல்காப்பியம் அவற்றின் இருப்பினை நன்கறிந்து எவ்வுயிர்க்குந் தீங்கின்றி இயங்குதல் வேண்டுமென்பதும் சமண் சமயக் கோட்பாடுகளாம். கி.பி. ஆரும் நூற்ருண்டினதாகிய ஆசாரங்க சூத்திரம் உயிர்களே இடவகையாற் பகுத்துரைத்ததாக. இதற்குப் பின் தோன்றிய உத்தராத்தியயனம் என்னும் நூல் உயிர்களின் பொறியுணர்வு பற்றி அவற்றை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றது. இந் நூல்களெல்லாவற்றுக்கும் காலத்தால் மிகமிக முற்பட்டது தொல் காப்பியமாகும். பிற்காலத்துச் சமணர் வகுத்த உயிர்ப் பாகுபாடு களின் நோக்கமும் தொல்காப்பியனர் உயிர்களை அறுவகை யாகப் பகுத்தற்குரிய நோக்கமும் வேறு வேருகும். ஆசாரங்க சூத்திரத்திற் சொல்லியபடி உயிர்களை இடவகையாற் பகுத் துரைக்கும் முறை தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. தொல் காப்பியனுள் கூறியபடி அறிவு வகையால் உயிர்களை ஆறு வகை யாகப் பகுத்துரைக்கும் முறை பண்டைச் சமண் சமய நூல்களில் காணப்படவில்லை. இயற்றமிழுக்கு இலக்கணங் கூறத் தொடங்கிய தொல்காப்பியஞர் சொற்பொருளாராய்ச்சியின் துறை நின்று உலகிலுள்ள உயிர்த் தொகுதிகளின் உடம்புகளையும் அவ்வுடம்புகளின் வைகிய உயிர்கள் மெய், வாய், முக்கு, கண், செவி மனம் என்னும் வாயில்களைப் படிப்படியாக முறையே பெற்றமையால் தாம் பெற்ற அப்பொறிகளின் வாயிலாக முறையே ஊற்றுணர்வு, சுவையுணர்வு, நாற்றவுணர்வு, ஒளியுணர்வு, ஓசை யுணர்வு, உயத்துணர்வு என்பவற்றைப் படிப்படியே பெற்றுச் சிறக்கும் இயல்பினையும் நன்கு கண்டு, ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீருக உயிர்கட்கு அமைந்த வளர்ச்சியினை ஆறு வகை யாகப் பகுத்து விளக்கியுள்ளார். இப்பாகுபாடு தமிழுக்கேயுரிய பொருளிலக்கணத்தின் பாற்படுவதல்லது ஒரு சாரார்க்குரிய சமயக் கோட்பாட்டின் பாற்பட்டதன்றென்க. சமண் சமய நூலாசிரியர்கள் மனவுணர்வுடைய மக்களையும், தேவர் நரகர் 1. மாணிக்கவாசகர் வரலாறுங் ভকতক பக்கம் 548.551,