பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvj ஒன்றிலும் பற்ருத எளியேனை இப் பல்கலைக்கழகத்தில் உண்டியும் உறையுளும் பெற்றுத் தமிழ் பயிலும் மாணவர்களுள் ஒருவளுக்கித் தமிழகமதிக்கும் தகைசான்ற பேராசிரியர்கள்பால் அரியபல நூல்களைப் பயிலச்செய்து இப் பல்கலைக்கழகத் தமிழா ராய்ச்சித் துறையிற் பணிபுரியும் நல்வாய்ப்பினையும் உளமுவந் தளித்த பல்கலைக்கழகத் தந்தையும் பெருங்கொடை வள்ளலு மாகிய செட்டிநாட்டரசர் அண்ணுமலைச் செட்டியார் அவர்களது பேரன்பின் திறத்தை எழுமையும் மறவாது போற்றும் கடமை யுடையேன். தந்தையர் ஒப்பர் மக்கள் என ஆசிரியர் தொல் காப்பியனர் எடுத்துரைத்த பழமொழிப் பொருளுக்கு இலக்கிய மாய்த் தம் தந்தையார் நிறுவிய செழுங்கலே நிலையமாகிய அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தைத் தம் கண்ணெனப் பேணிப் பாதுகாத்துவரும் இணைவேந்தர் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் முத்தைய செட்டியாரவர்களுக்கும் பல்கலைக்கழகத் துணை வேந்தரும் ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே என்ற பொருளுரையை யுளத்துட்கொண்டு தமிழ் நலம் வளர்க்கும் செந் தமிழ்ப் பெருந்தகையும் ஆகிய திருவாளர் T.M. நாராயணசாமி பிள்ளை M. A., B.L., M.L.C. அவர்களுக்கும் எனது அன்பு கனிந்த நன்றியும் வணக்கமும் என்றும் உரியனவாகும். அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் தமிழிலக்கிய வரலாறு பற்றிய இம்முதற் பகுதியை எழுதுமாறு வகுத்துக் கொடுத்த பேராசிரியர் டாக்டர் A. சிதம்பரநாதச் செட்டியார் M.A., Ph.D., அவர்களுக்கும் இந்நூல் சிறந்த முறையில் வெளி வருதற்கேற்ற ஆய்வுரைகளை அவ்வப்போது எடுத்துக்கூறி இதனைச் சிந்தித்து எழுது தற்கேற்ற வாய்ப்பும் ஊக்கமும் வழங்கியதுடன் இந்நூலுக்குச் சிறந்ததொரு முகவுரையினையும் அன்புடன் எழுதி உதவிய பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் பேராசிரியர் வித்துவான் திரு .ே சுப்பிரமணிய பிள்ளை, M.A., B.L., அவர்களுக்கும், யான் இந்நூலே எழுதி