பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு #65 என்பவர்களையும், விலங்கு பறவை முதலிய ஐயறிவுடைய உயிர் வகையுள் அடக்குவர். "வானவர் மக்கள் நரகர் விலங்கு புள் ஆதி செவியறிவோ டையறி வுயிரே" (நன்-உயிரியல்.8) எனப் பவணந்தியார் கூறுதல் காண்க. உத்தராத்திய யனம் என்னும் சமண் நூலும் இங்ங்ணமே உயிர்களைப் பொறியுணர்வு காரணமாக ஐவகையாகப் பகுத்துரைக்கின்றது. இவ்வை ந் தறிவின் வேருக ஆருவதறிவாகிய மன அறிவு ஒன்றுண்டென்பது பழைய சமண் நூல்களில் தெளிவாகக் குறிக்கப்படவில்லை. 'மாவும் புள்ளும் ஐயறி வினவே” 'மக்கள் தாமே ஆறறி வுயிரே" எனவரும் சூத்திரங்களால் நாற்கால் விலங்கும் பறவை முதலி யனவும் ஐயறிவுயிர்களென்றும் மக்கள் ஆறறிவுயிரெனப்படுவ ரென்றும் தொல்காப்பியனர் பகுத்துரைத்துள்ளார். தொல்காப் பியத்தை நன்கு பயின்று வழிநூல் செய்த பவணந்தியார், முதனூலாசிரியராகிய தொல்காப்பியஞர் கூறியவாறு ஐயறி வுயிரின் வேருக மக்களை ஆறறிவுயிராகத் தம் நூலில் எடுத்துரைத் திலர். நன்னூலார் சமண சமயத்தவராதலின் தம் சமயச் சான்ருேள் கூறிய ஐவகையுயிர்ப் பாகுபாட்டினையே விடாப்பிடியாகக் கொண்டு அதனையே தமது நூலுள்ளும் விளக்கிப்போந்தா ஆசிரியர் தொல்காப்யியர்ை கூறியவாறு மக்களே ஆறறிவுயி ரெனப் பிரித்துரைத்தல் சமணரது பழங்கொள்கையாக இருந் திருக்குமாகுல் பிற்காலத்தவராகிய நன்னூலாசிரியர் தொல் காப்பியனர் கொள்கையைத் தம்நூலிற் கூருது புறக்கணித்து விடுதற்கு ஒரு சிறிதும் இடமில்லையென்க. உணர்ச்சிவாயில் களின் குறைவு மிகுதிகாரணமாக உயிர்களை ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீருகப் பகுத்துரைக்கும் முறை தமக்கு முற்பட்ட தமிழ்த் சான்ருேது ஆராய்ச்சியின் பயனுக வகுத்தமைக்கப்பெற்ற