பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 தொல்காப்பியம் றென்பது, இவ்விருவேறு சொற்களுக்கும் அமைந்த பொருள் வேறுபாட்டினை ஊன்றி நினையாமையால் வந்த பிழையாகும். ப்ரக்ளுப்தி என்பதற்குப் புத்தி, சங்கேதம், ஒருவகைப் பெண் தெய்வம் என்பன பொருள்களாம். இவை தவிர இப்பெயரின தாகிய செய்யுள் வகை யொன்றில்லை யென்பது வடநூல் வல்லார் அனைவர்க்கும் தெரிந்த செய்தி, சமண நூல்களில் வழங்கும் பண்ணத்தி யென்னும் சொல் ப்ரக்ளுப்தி என்னும் ஆரிய மொழியின் பாகதச் சிதைவாகும். தொல்காப்பியத்திற் குறிக்கப்படும் பண்ணத்தியென்னும் சொல் இசைத்தமிழ்ச் செய்யுள்களைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாகும் இவ்விருவேறு சொற்களின் பொருள் வேற்றுமையினைச் சிறிதும் எண்ணிப்பாராது எழுத்தொப்புமை யொன்றே கொண்டு இரண் இம் ஒன்றெனத் துணிதல் கூடாது. சமணர்களால் பாகதச் சிதைவாக வழங்கப்பட்ட பண்ணத்தி யென்னும் சொல்தானும் பூர்வீகச் செய்யுள் வகையொன்றின் பெயராக வழங்கியதென்ப தற்குச் சிறிதும் ஆதரவில்லை. அஃது எங்ஙனமாயினும் சமணர் கள் வழங்கிய பண்ணத்தி யென்னும் பாகதச் சொல்லும் தொல் காப்பியத்தில் வரும் பண்ணத்தி என்னுந் தனித் தமிழ்ச் சொல்லும் வெவ்வேறு மொழியைச் சார்ந்தன என்றே துணிதல் வேண்டும். (7) ஐந்திர வியாகரணம் வைதிக சாயத்தவரால் தொன்று தொட்டு மேற்கொள்ளப் பெற்றதென்பதும், புறச் சமயத்தவராகிய சமணர் இவ்வியாகரணப் பயிற்சியை வெறுத்தொதுக்கினமை சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் வாய்மொழியால் நன்கு தெளியப்படுமென்பதும் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்னுந் தொடர்ப் பொருளை ஆராயும் வழி விரித்துரைக்கப் பட்டன. ஆகவே ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது 1. இந்நூல் பக்கம், 74-83.