பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊72 தொல்காப்பியம் நூல் எல்லார்க்கும் பொதுவாகப் பயன்படுதல் வேண்டுமென்ற கருத்தினுலேயே அந்நூன்முகத்தில் தமது வழிபடு தெய்வத்திற்கு வணக்கம் எதுவுமே கூருது விட்டார். தெய்வப் புலமைத் திரு வள்ளுவரும் ஆசிரியர் தொல்காப்பியஞர் கருத்தை நன்கு உணர்ந்தவராகலின் அவரைப் பின்பற்றியே தாம் எச்சமயத் தார்க்கும் பொதுவாக இயற்றிய திருக்குறள் நூலின்கண் தமது வழிபடுதெய்வத்திற்கு வாழ்த்துக் கூருமல் எல்லாச் சமயத்தாரும் ஏற்றுக்கோடற்குரிய பொது நிலையில் வைத்துக் கடவுள் வாழ்த் துக் கூறியுள்ளார். இவ்விருவரது உளக்கருத்தையும் நன்குணர்ந்த தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், பேரா சிரியர், சேவைரையர், நச்சிர்ைக்கினியர் முதலியோரும் திருக் குறளுரையாசிரியர் பரிமேலழகர் முதலியோரும் எச்சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளும் பொது நிலையில் நின்று உரையெழுதி யிருப் பது அறிஞர்களால் வியந்து யாராட்டத் தக்கதாகும்.