பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் நுதலிய பொருள் வண்புகழ்முவர் தண்பொழில் வரைப்பிலே வழங்கும் செந் தமிழ்மொழியின் உலகவழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப் படையாகக்கொண்டு தமக்கு முன்னுள்ள் தமிழ்த் தொன்னூல் களையும் நோக்கி எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை விலக்கணங்களையும் முறைப்பட ஆராய்ந்து இவற்றின் இயல்புகளே யெல்லாம் தொல்காப்பியனர் தாம் இயற்றிய தொல்காப்பிய நூலின் கண்ணே தொகுத்துக் கூறியுள்ளார். இந்நூல் சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக்களையுடைய பிண்டமாக அமைந்துளது. ஆசிரியப்பாவைப்போன்ற யாப்பிலமைந்த நூற்பா சூத்திரமெனப்படும். ஆசிரியப்பாவுக்கு அடிவரையறையுண்டு. இந்நூற்பாவுக்கு அடிவரையறையில்லை. அடிவரையறை இல்லாத செய்யுள்வகை ஆறு என்பர் தொல்காப்பியர். அவற்றுள் நூற் பாவும் ஒன்று. கண்ணுடியினகத்தே எதிர்ப்பட்ட பொருள் இனிது விளங்குமாறுபோன்று படித்த அளவிலேயே ஆராயாமற் பொருள் எளிதில் விளங்க இயற்றப்படுவதே நூற்பாவாகிய சூத்திரமாகும். அவற்றுள், சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே(162) எனவரும் செய்யுளியற் சூத்திரம் சூத்திரத்தியல்பினை நன்கு விளக்குதல் காண்க. ஒத்த இனத்தனவாகிய மணிகளை ஒரு மாலை யாகக் கோத்தமைப்பதுபோன்று ஓரினமாக வரும் பொருள்களே. ஒருசேர இயைத்துரைத்தற்கு இடமாக அமைவது ஒத்து எனப் படும். இதனை இயல் என்ற பெயராலும் வழங்குதலுண்டு. பல்வேறு