பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொல்காப்பியம் நுதலியபொருள் வகைப்படவரும் பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக் கணங் கூறுவதாய் அவையெல்லாவற்றையும் தன்னுள்ளே யடக்கி நிற்பது படலம் எனப்படும். சூத்திரம், ஒத்து, படலம் என்னும் இம் மூன்றுறுப்பினையும் அடக்கி நிற்பது பிண்டம் எனப்படும். இவ்வாறு முன்றுறுப்படக்கிய பிண்டமாக அமைந்ததே இத்தொல் காப்பியமாகும். இதன்கணுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்புக்களாம். படலத் தின் உள்ளுறுப்பாக அமைந்தவை ஒத்துக்கள். ஒத்தின் உள்ளுறுப்பாக விளங்குவன சூத்திரங்கள். சூத்திரமாகிய உறுப் பொன்றேயுடையநூல் இறையனர்களவியல். சூத்திரம், ஒத்து ஆகிய இரண்டுறுப்புடைய நூல் பன்னிருபடலம் சூத்திரம், ஒத்து, படலம் ஆகிய மூன்றுறுப்பும் ஒருங்குடைய நூல் தொல்காப்பியம். இம்மூவகை நூல்களேயும் முறையே சிறுநூல், இடைநூல், பெரு நூல் எனவும் வழங்குதலுண்டு. 'தொல்-செய்-இளம்-165) தொல்காப்பியம் என்னும் இந்நூல் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றதிகாரங்களையுடையதாய் ஒவ்வோ திகாரங் களுக்கும் ஒன்பதொன்பது இயல்களாக இருபத்தேழியல்களால் இயன்றது. இந்நூற் சூத்திரங்கள் 1595-என இளம்பூரணரும், 18 என நச்சிளுர்க்கினியரும் வகுத்து உரையெழுதி யுள்ளார்கள். எழுத்ததிகாரம் எழுத்தின்து அதிகாரத்தையுடையது எழுத்ததிகாரம் எனக் காரணப்பெயராயிற்று. அதிகாரம்-முறைமை. எழுத்துக்களின் இலக்கணத்தை முறைமைப்பட விரித்துரைக்கும் படலம் எழுத்ததி காரம் என வழங்கப் பெறுவதாயிற்று. எழுத்தாவது மக்களாற் பேசப்படும் மொழிக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். தொல் காப்பியஞரால் எழுத்தெனச் சொல்லப்பட்டவை அகர முதல்