பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி மரபு o 2. மொழி மரபு மொழிகளுக்கு எழுத்தான்வரும் மரபுணர்த்தினமையின் மொழிமரபெனப்பட்டது என இளம்பூரணரும் எழுத்தானம் மொழியது மரபுணர்த்தினமையின் இவ்வோத்து மொழிமரபெனக் காரணப்பெயர்த்தாயிற்று' என நச்சிஞர்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணங் கூறினர். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கு என இளம்பூரணர் கூறுவர். எனவே எழுத்துக்களை மொழிப்படுத் திசைக்குங்கால் மொழியில் நின்ற எழுத்துக்களுக்கு உளவாம் இயல்பினை யுணர்த்துவது இவ்வியலென்பது பெறப்படும். இவ்வியலின் சூத்திரங்கள் 49. மொழியினைச் சார்ந்து ஒலித்தலேயே இயல்பாகவுடைய சார்பெழுத்து மூன்றிற்கும் அவைதாம் குற்றியலிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என முன்னருரைத்த முறையே இவ்வியலில் இலக்கணம் கூறுகின்ருர். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய ஈரிடத்தும் வருமெனக்கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றிய லுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒரு மொழியாய்தம், புணர் மொழியாய்தம் என ஆருகப்பிரித்து முறையே முதல் 6-வரை புள்ள சூத்திரங்களில் உணர்த்தி 7-ஆம் சூத்திரத்தில் அவ்வொரு மொழி யாய்தத்திற்கு ஒர் இலக்கணமுங் கூறியுள்ளார். இவை மொழியிடைச் சார்த்தியுணரப்படுவன ஆகலானும் ஒருவாற்ருன் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் நூன் மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. இவற்றையடுத்து உயிரளபெடை, மொழியாக்கம், மெய்களின் இயக்கம், ஈரொற் றுடனிலே, மகரக் குறுக்கம், எழுத்துப்போலி, ஐகாரக் குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கிருமெழுத்துக்கள், என்பன உணர்த்தப்பட்டன. இவையெல்லாம் தனி யெழுத்துக்களிலன்றி மொழிகளில் வைத்து அறிந்துகொள்ளுதற்குரியனவாதலின் இவ்வியலிற் கூறப்பட்டன.