பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பியல் § சொல்லவே இடையெழுத்தாறும் மிடற்றுவளியையும் வல்லெழுத் தாறும் தலைவளியையும் பெற்று ஒலிப்பனவெனக் கொண்டார் இளம்பூரணர். முதலெழுத்துக்களைச் சார்ந்துதோற்றினல்லது தனித் தொலிக்கும் இயல்பில்லாதன என ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட சார்பெழுத்துக்கள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய முத லெழுத்துக்களின் பிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகப் பொருந்தி இசைப்பனவாம். இவ்வாறு எழுத்துக்களின் பிறப் புணர்த்திய தொல்காப்பியனர் அவ்வெழுத்துக்கள் பெறும் மாத் திரையினைக் குறித்துக்கூறும் விளக்கம் இவண் கருதத்தகுவ தாகும். எல்லாவெழுத்துக்களையும் வெளிப்படச் சொல்லப்பட்ட இடத்தின்கண் எழுங்காற்றினலே ஒலிக்குமிடத்து அவ்வெழுத்துக் கள் யாவும் கொப்பூழடியிலிருந்தெழுங் காற்ருனது தலையளவுஞ் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலாகிய திரிதருங் கூறு பாட்டினையுடையன. இவ்வெழுத்துக்களுக்கு இங்ங்ணம் உறழ்ச்சி வாரத்தில்ை உளதாம் அகத்தெழுவளியிசையினை நுட்பமாக ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறை யினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனுகப் புறத்தே வெளிப்பட்டிசைக்கும் மெய்தெரிவளியிசையாகிய எழுத் துக் களுக்கே யான் இங்கு மாத்திரை கூறினேன் என்பது ஆசிரியர் கூறிய விளக்கமாகும். உந்தியில் எழுந்தகாற்று முன்னர்த் தலைக் கட் சென்று பின்னர் மிடற்றிலேவந்து அதன்பின்னர் நெஞ்சிலே நிற்றல் உறழ்ச்சிவாரம் எனப்படும். மூலாதாரத்திலிருந் தெழுங் காற்ருேசை அகத்தெழுவளியிசை யெனப்பட்டது. எல்லார்க்கும் எழுத்துருவம் நன்கு புலகை வாயிலிருந்து புறத்தே வெளிப்பட் டிசைக்கும் காற்றினலாகிய எழுத்தோசையே மெய்தெரிவளி யிசை யெனப்படும். அந்தணர் மறையிற் கூறுமாறு அகத்